headlines

img

வரவேற்கத்தக்க தமிழ்நாடு பட்ஜெட்

தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் பல்வேறு வரவேற்கத் தக்க அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட பல்வேறு வாக்கு றுதிகளில் மிகவும் முக்கியமானது மகளிர்க்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டமாகும். இந்த பட்ஜெட்டில் அதற்கான அறி விப்பு வெளியாகியுள்ளது வரவேற்கத்தக்கது.

அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் இதற்காக நிதிநிலை அறிக்கையில் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும் நிதிய மைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறி வித்துள்ளார். பெண்களுக்கு இலவசப் பேருந்து திட்டம் ஏற்கெனவே பெரும் வரவேற்பைப் பெற் றுள்ள நிலையில் இந்தத் திட்டமும் மகிழ்ச்சியோடு வரவேற்கப்படும் திட்டமாக அமைந்துள்ளது. 

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு மது ரையில் ரூ.8500 கோடி மதிப்பீட்டிலும் கோவையில் ரூ.9000 கோடி மதிப்பீட்டிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக் கப்பட்டுள்ளது நீண்டநாள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும். ரூ,1000 கோடியில் வடசென்னை வளர்ச்சித் திட்டம், சென்னை தேனாம்பேட்டை, சைதாப் பேட்டை இடையே நான்குவழி மேம்பாலம் போன்ற திட்டங்களும் மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும். 

ரூ..800 கோடியில் பத்தாயிரம் குளங்கள், ஊரணி கள் புதுப்பிக்கப்படும் என்பதும், ரூ.320 கோடியில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், கடல் அரிப்பைத் தடுக்க நெய்தல் மீட்சி இயக்கம் உருவாக்கப்படும் என்பதும் தமிழ்நாட்டில் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழலை பாது காக்க உதவும்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் இதனால் மொத்தமாக 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  புதிரை வண்ணார் நலவாரியத்திற்கு ரூ.10 கோடி நிதி போன்ற அறிவிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற் றாண்டு நூலகம் வரும் ஜூன் மாதம் திறக்கப்படும் என்பதும் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் என்பதும் அண்ணல் அம்பேத் கரின் சிந்தனைகளை தமிழில் மொழி பெயர்க்க ரூ.5 கோடி ஒதுக்கீடு என்பதும் வரவேற்கத்தக்கவை.

கல்வித்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ள போதும், பொதுக் கல்வி மற்றும் பொது சுகாதாரம் போன்றவற்றை உறுதிப்படுத்துவதில் மாநில அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளக்கூடாது. முதி யோர்களுக்கான ஓய்வூதியம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், போக்குவரத்து  ஊழியர் ஓய்வுகால பலன் நிலுவை, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் போன்ற எதிர்பார்ப்புமிக்க திட்டங்களிலும் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும்.

;