headlines

img

தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய பட்ஜெட்

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் உலக பொதுமறை யாம் திருக்குறளை தாராளமாக பயன்படுத்தியுள் ளார். குடியரசுத் தலைவர் உரையிலும், நரேந்திர மோடி அரசு திருவள்ளுவரின் பாதையில் நடை போடுவதாக பெருமிதத்துடன் கூறப்பட்டது. 

ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் கருத்தியல் கொண்ட நூல்கள் எதையும் மதச்சார்பற்ற ஒரு ஜனநாயக நாட்டின் நிதிநிலை அறிக்கையில் மேற்கோள் காட்ட முடியாது. இந்த வகையில்  திருக்குறள் தனித்து நிற்கிறது. ஆனால் ஒன்றி ரண்டு திருக்குறள்களை ஆங்காங்கே எடுத்துச் சொல்லிவிட்டால் போதும், தமிழக மக்களை திருப்திப்படுத்தி விடலாம் என ஒன்றிய ஆட்சியா ளர்கள் கருதுகிறார்கள்.

வழக்கம் போல இந்த பட்ஜெட்டிலும் தமிழ் நாட்டின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மதுரையில் ஒற்றைச் செங்கலுடன் காட்சியளிக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு இந்த பட்ஜெட்டிலும் நயாபைசா கூட ஒதுக்கப்படவில்லை. 

இதைக் கண்டித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாத்மா காந்தி சிலை அருகில் கூடிநின்று எங்கள் எய்ம்ஸ்க்கு நிதி எங்கே? என கேள்வி எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். 

சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள கர்நாட கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சலுகை மழை அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் நடைபெறும் ரயில்வே திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 

ஜிஎஸ்டி வரி என்ற பெயரில் மாநிலங்களின் வருவாயை ஒன்றிய அரசு உறிஞ்சிக் கொள்கிறது. ஜிஎஸ்டி வரி நடைமுறைப்படுத்தப்பட்டபோது இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீடு சரி செய்யப்படும் என்று கூறப்பட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு உரிய இழப்பீடு முறை யாக வழங்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, இழப்பீடு வழங்கும் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கோரிக்கை பட்ஜெட்டில் நிராகரிக்கப் பட்டுள்ளது. 

மாநிலங்களுக்கு கடன் வழங்குவதற்கான நிபந்தனைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள் ளன. உதாரணமாக, மாநிலங்கள் கடன் பெற வேண்டுமானால், மின்துறையை தனியார்மய மாக்குவது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் ஏற்கெனவே உள்ளன. மாநில அரசின் பொதுத் துறைகளையும் முற்றிலும் தனியார்மயமாக்கவே ஒன்றிய அரசின் அறிவிப்புகள் வழிகோலும்.

நூறுநாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு மூன்றில் ஒரு பங்காக குறைக்கப் பட்டுள்ளது கிராமப்புற பொருளாதாரத்தை பெருமளவு பாதிக்கும். மாநிலங்களின் நிதி சுதந்தி ரத்தை மேலும் மேலும் பறிக்கும் வகையிலேயே ஒன்றிய பட்ஜெட் அமைந்துள்ளது. இதற்கெதி ராக ஒன்றிணைந்த போராட்டம் அவசியமாகிறது.

;