headlines

img

டொனால்டு டிரம்ப் 2.0 உலகின் அச்சுறுத்தல்!

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப் தனது பதவி யேற்பு உரையில் ‘அமெரிக்காவின் பொற்காலம் துவங்கிவிட்டது’ என்று கூறியிருக்கிறார். ஆனால் அவரது அறிவிப்புகள் உலகின் ‘கஷ்ட காலம்’ துவங்கி விட்டதாகவே உணர்த்துகிறது. அத்துடன் அமெரிக்காவை சிறந்த நாடாக்கவே கடவுள் தன்னைக் காப்பாற்றினார் என்றும் கூறியிருக்கி றார். நம் பிரதமர் மோடி ‘நான் மனிதக் குழந்தையல்ல’ என்று கூறியது நினைவுக்கு வருகிறது.

வலதுசாரிகளின் வார்ப்புகளும் வார்த்தைக ளும் செயல்பாடுகளும் முதலாளிகளுக்கானதா கவே அமைகின்றன என்பதை ஹிட்லர் முதலி யோரின் நடவடிக்கைகள் வரலாற்றில் ஏற்கெ னவே நமக்கு தெளிவாக்கியிருக்கின்றன. ஆக்கிர மிப்புச் செயல்பாடுகளுக்கு ஏதாவது ஒரு காரணம் கூறுவது இப்போது டிரம்ப்புக்கும் பொருந்துகிறது.

ஏற்கெனவே உலக போலீஸ்காரனாக நடந்து கொள்ளும் அமெரிக்கா, போர் தொடுப்பதையும் மற்ற நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பதையும் செய்து கொண்டிருப்பதை இன்னும் அதிகரிக் கவே ‘உலகின் சக்தி வாய்ந்த ராணுவம் உடைய நாடாக அமெரிக்கா உருவெடுக்கும்’ என்று கூறியி ருக்கிறார் டிரம்ப். ஆனாலும் கூட அவர் தன்னை அமைதியின் தூதுவன் போல் காட்டிக் கொள்ள முயற்சிப்பது நகைப்புக்கு உரியது. 

உலகின் மிகச் சிறந்த ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் அமெரிக்கா, அதற்கு நேர்மாறா கவே செயல்படுகிறது. பாலின சுதந்திரத்தை மறுக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அரசின், பன்முகத்தன்மை, சமத்துவம், உள்ளடக்குதல் (டிஇஐ) திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி வைத்து உத்த ரவு பிறப்பித்துள்ளார். ராணுவம் தவிர்த்த மற்ற ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து விலகிக் கொள்ளும் நடைமுறையை தொடங்கும் செயல் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். அவரது முத லாவது ஆட்சிக் காலத்தில் (கோவிட்-19 தாக்கு தல் போதே) இத்தகைய மோசமான முடிவை எடுத்தார். தற்போது மீண்டும் அதைத் தொடங்கி யுள்ளார். அதுபோலவே பாரீஸ் ஒப்பந்தத்திலி ருந்தும் முன்போலவே வெறியேறுவதையும் செய் துள்ளார். அதன் தொடர்ச்சியாகவே தேசிய ஆற்றல் அவசர நிலை என்ற பெயரில் கச்சா எண் ணெய், எரிவாயு, இயற்கை வளங்களை எடுப்பதை அதிகரிக்க முடிவு எடுத்துள்ளார். இவை யாவும் பசுமைக்கு  எதிரான நடவடிக்கை என்பதுடன் முத லாளிகளுக்கான லாப வேட்டைக்கு வழி ஏற்படுத் துகின்றன. மின்சார வாகனங்கள் கட்டாயம் என்ற உத்தரவு திரும்பப் பெறப்பட்டதும் அதன் மற்றொரு முடிவுதான்.

ஆபிரகாம் லிங்கனை மேற்கோள் காட்டி யிருக்கும் டிரம்ப் மக்களால் மக்களுக்காக அல்ல, முதலாளிகளுக்காக முதலாளிகளால் செய்யப் படும் ஆட்சி என்பதையே தனது நடவடிக்கைகள் மூலம் பிரகடனப்படுத்தியுள்ளார்.