headlines

img

கூட்டுக் களவு ஆட்சி

இந்திய நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை இன்று (ஜுன் 17) கூடுகிறது. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, ரூ.27 ஆயிரம் கோடியை செலவழித்து, மீண்டும் அரியணையை கைப்பற்றி இருக்கிறது.  இது அம்பானி, அதானி  உள்ளிட்ட - பாஜகவின் பெரும்  கார்ப்பரேட்  கூட்டுக்களவாணிகள் அளித்த தொகை; இதற்கு கைமாறாக அடுத்த  ஐந்தாண்டு காலமும் இந்தக் கூட்டுக் களவாணிகளுக்காகவே மோடியின் அரசாட்சி இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குற்றம்சாட்டியிருக்கிறார். இந்தியத் தேர்தல் ஆணையம் அளித்துள்ள கடந்த அறுபது ஆண்டுகால தேர்தல் செலவின மதிப்பீடுகளின்படி, 1952க்கும் 2014க்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு தொகுதிக்கு ஆகும்  செலவு 274 மடங்கு - அதாவது ரூ. 2.6 லட்சத்தி லிருந்து ரூ. 7.138 கோடியாக அதிகரித்துள்ளது. இது இந்தியாவில் முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ அரசியல் கட்சிகளுக்குப் பின்னால் அவற்றிற்கு தாராளமாக நிதியளிக்கும் புதிரான புரவலர்கள் இருப்பதை எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி காட்டுகிறது.

பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள 2,577 அரசியல்வாதிகளிடம் கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய கணிப்பின்படி, நாடாளுமன்ற மற்றும்  சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களின் வருமானத்தின் மூலாதாரம் என்ன என்பதே புதிரானதாக இருக்கிறது. இவர்கள் பதவியில் இருக்கிறபோது இவர்களது வருமானம் உச்சத்தைத் தொடுகிறது. அரசியல்ரீதியான நிதி யளிப்பு இந்தியாவில் ஒரு பொருளாதாரமாகவே இருப்பதை இது காட்டுகிறது.  ஆகவேதான், பாஜகவின் முதலாவது அரசு ‘மிகவும் வெளிப்படையானது’ என்று தம்பட்ட மடித்து கொண்டுவந்த தேர்தல் பத்திர திட்டம், உயர்மட்ட அரசியல் ஊழலை அதிகாரப்பூர்வ மாக நிறுவனமயமாக்குவதே என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடைவிடாமல் சாடி வருகிறது.

2016 நிதிச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து “அயல்நாடு” நிறுவனங்களுக்கான வரை யறையை தளர்த்தியதன் மூலம் போலி நிறு வனங்களிடமிருந்தும் சட்டப்பூர்வமான நிதி பெறு வதற்கான வழியை பாஜக அரசு திறந்தது. அயல் நாடு பங்களிப்பு (கட்டுப்பாடு) சட்டம், 2010ல் மேற்கொண்ட திருத்தம் இந்தியத் தேர்தல்களுக் கான வெளிநாட்டு நிதி மீதிருந்த தடையை  நீக்கிவிட்டதுடன் இந்தத் திருத்தம் முன் தேதி யிலிருந்து அமலுக்கு கொண்டுவரப்பட்டதால் கடந்த 42 ஆண்டுகளில் கட்சிகள் (முக்கியமாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ்) வெளிநாடுகளிலிருந்து “சட்டத்திற்கு புறம்பாக” பெற்ற தேர்தல் நன்கொடைகள் தொடர்பாக நீதிமன்றங்களிலிருந்த வழக்குகளிலிருந்து விடுதலை பெற்றுவிட்டன.  கடுமையான போட்டி கொண்ட தேர்தல் களில் ஒரு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவதில் பணத்தின் பங்கு மிக முக்கியமானது என, மிக மிக அதிக தொகையை  செலவழித்து வெற்றி பெற்றதன் மூலம் பாஜக காண்பித்துவிட்டது. எளிய மக்களின் அரசியல் இயக்கங்களுக்கு இது ஒரு பெரிய சவால்.

;