headlines

img

ஏன் இந்த அவசரம்?

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் இளநிலை  மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்திருப்பதாக தேசிய மருத்துவ ஆணை யத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் அறி வித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 

இதனால் 2023 - 24 ஆம் கல்வியாண்டின் ஐநூறு எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்கள் பறிபோ கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

போதிய பேராசிரியர்கள் இல்லாதது, சிசிடிவி  கேமரா இல்லாதது, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட பயோ மெட்ரிக் வருகை பதி வேடு இல்லாதது போன்றவை அங்கீகாரம் ரத்துக்கான காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரக குழு தில்லி சென்றுள்ளதாகவும், உரிய விளக்கங்கள் அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். பேராசிரியர்கள் பற்றாக்குறைதான் அங்கீகார ரத்துக்கு காரணம் என்று கூற முடி யாது என்றும், சிசிடிவி கேமரா இல்லை என்பன  போன்ற சிறிய காரணங்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.

 தமிழக அரசு இந்த விசயத்தில் அவசரமாக தலையிட்டு மூன்று கல்லூரிகளிலும் வரும் கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்களை உறுதி செய்ய வேண்டும். இந்த மூன்று கல்லூரிகளில் மட்டுமின்றி தமிழகம் முழு வதும் உள்ள அரசு கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவிலேயே அரசு மருத்துவக் கல்லூரிகளை அதிகமாக கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இது பாராட் டுக்குரியது. 

ஆனால் அதே நேரத்தில் மருத்துவக் கல்வித் தரத்திலும் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்பதை உறுதி செய்ய வேண்டும். உரிய கட்டமைப்பு வசதிகள், கற்பிக்கும் வசதிகள் முழுமையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

அதே நேரத்தில் தேசிய மருத்துவ ஆணை யத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரி யத்தின் நடவடிக்கை பொருத்தமானதாக இல்லை. குறைகள் சரி செய்யப்பட வேண்டும் என் பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடி யாது. ஆனால் புகழ்பெற்ற ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உள்பட மூன்று கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிப்பதை ஏற்க முடியாது. 

ஏராளமான தனியார் மருத்துவக் கல்லூரி கள் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல், கல்லூரிகளை நடத்தி வருவதோடு, வகை தொகையில்லாமல் கொள்ளையடிக்கின்றனர். இதைத் தடுக்க தேசிய மருத்துவ ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரிய வில்லை. மதுரையில் துவக்குவதாக அறி விக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை தரையில் போட்ட கல்லாக கிடக்கிறது. மறுபுறத்தில் தமிழக மருத்துவக் கல்லூரிகளை முடக்க முயல்வது நியாயமற்றது.

 

;