headlines

img

ஆளுநரின் அலட்சியம்

இணைய வழி சூதாட்டம், ஆன்லைன் ரம்மி, போகோ இவற்றைத் தடை செய்தல் ஒழுங்கு முறைப் படுத்துதல் அவசரக்கால சட்டம் ஞாயிற்றுக்கிழமையோடு காலாவதியாகி விட்டது. 

அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஏற்கனவே ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் சட்டம் திருத்தப்பட்டு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டது.  அந்தச் சட்டத்தில் சில சந்தேகங்களைக் கேட்டு  மாநில அரசுக்கு ஆளுநர் ரவி கடிதம் அனுப்பினார்  அந்த கடிதத்திற்கு 24 மணி நேரத் திற்குள் விளக்கம் அளித்து தமிழக அரசு மீண்டும் ஆளுநருக்கு கடிதம்  அனுப்பியது.  

இதன்பின்னரும் அவருக்கு சந்தேகம் தீரவில்லை போலும்.ஞாயிற்றுக்கிழமைக்குள் அவர் ஒப்புதல் அளிப்பார் என்று மாநில அரசு காத்திருந்தது. ஆனால் எது எதற்கோ வாய்திறக்கும் ஆளுநர் இந்தச் சட்டம் குறித்து பேச மறுக்கிறார். 

“ஆளுநருக்கு  மாநில அரசு அனுப்பி உள்ள கடிதத்தில், முதல் உரையிலேயே 99 சதவீத மக்கள் ஆன்லைன் ரம்மி, போகோ, இணைய வழி சூதாட்டம் ஆகியவற்றைத் தடை செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோன்று உலக சுகாதார நிறுவனமும் இவைகள் ஒரு நோய் என்றும் அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த நோயை ஒழிக்க வேண்டியது நம்முடைய தலையாய கடமை. அந்த கடமையைத் தான் தமிழக அரசு சட்டமாக இயற்றியுள்ளது’’ என்று மிகத்தெளிவாகத் தமிழக அரசு விளக்கிய பின்னரும் ஆளுநர் பிடிவாதம் பிடிப்பது கண்ட னத்திற்கு உரியது.

ஆன்லைன் ரம்மியை பாதுகாக்க ஏன் இவ்வ ளவு துடிக்கிறார் என்று தெரியவில்லை. பொது நலன் கருதி கொண்டு வரப்பட்டுள்ள ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கா மல் ஆளுநர் காலதாமதம் செய்யவேண்டிய அவசி யமே இல்லை.  சமீபத்தில் கூட தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து  வந்த  ஒடிஷா மாநில பெண் பந்தனா மஜ்கி, ஆன் லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்த தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்குப் பிறகு நிகழும் 33 ஆவது தற்கொலை இதுவாகும்.  

ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேரா பத்தை இனிமேலாவது ஆளுநர் உணரவேண்டும்.    அவசரச் சட்டம் காலாவதியாகி விட்டது. எனவே பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய  சட்டத்திற்காவது  ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். 

ஆளுநர் பதவி என்பது மாநில அரசு இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கத் தானே தவிர அவற்றை நிறுத்தி வைத்து அரசியல் சூதாட்டம் ஆடுவதற்காக  அல்ல. ஆளுநர் ரவி தமிழக அரசிடம் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் மக்கள் நலன் சார்ந்த சட்டங்க ளுக்கு விரைந்து ஒப்புதல் வழங்கவேண்டும்.

;