headlines

img

பொது முடக்கம் மட்டும் போதாது

தமிழகத்தில் குறிப்பாக தலைநகர் சென்னை யில் கொரோனா நோய்த் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட் டங்களில் ஜூன் 19 முதல் 12 நாட்களுக்கு மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்க காலத்தில் பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

காய்கறி, மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்குகள், தனி மனித இடைவெளியுடன் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல் படும் என்றும், ரேசன் கடைகள் காலை 8 மணி முதல் மாலை 2 மணிவரை செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதோடு ஜூன் 21,28 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையான பொது  முடக்கம் பின்பற்றப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. 

மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில் அமைச்ச ரவை கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட் டுள்ளன. பொது முடக்கம் மட்டுமே கொரோனா தொற்றை தடுத்து விடும் என்று கூற முடியாது. ஒருங்கிணைந்த பல்வேறு நடவடிக்கைகள் அவ சியமாகின்றன. குறிப்பாக தொடர்ச்சியான பொது முடக்கத்தால் மக்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை ஈடுகட்ட அரசு அளித்த நிவாரண உதவிகள் யானைப் பசிக்கு சோளப் பொரி என்ற அளவில் கூட இல்லை. 

மேலும் மேலும் பொது முடக்கம் அறிவிக்கப் படும் நிலையில், மக்களின் வாழ்வாதாரம் அடி யோடு பாதிக்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் குறைந்தபட்சம் 7,500 ரூபாய் வழங்க அரசு முன் வரவேண்டும். தேவை யான உணவு தானியங்கள் உள்ளிட்ட அத்தியா வசியப் பொருட்களை ரேசன் கடைகள் மூலம் வழங்க வேண்டும். 

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நோய்த் தொற்று அதிகரித்துள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளால் சமாளிக்க முடியாத நிலை உள்ளது. எனவே முழு வீச்சில் தனியார் மருத்துவமனைகளையும் பயன்படுத்த வேண் டும். அரசு அறிவித்துள்ள பரிசோதனை மற்றும் சிகிச்சை கட்டணங்கள் அதிகமாக இருப்பதாக விமர்சிக்கப்படும் நிலையில், தனியார் மருத்துவ மனைகள் இந்த கொள்ளை நோய் காலத்தை தங்களது கொள்ளைக்கு பயன்படுத்துகின்றன. இதை  அரசு அனுமதிக்கக்கூடாது. தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, விதிக்கப்படும் கட்டணம் ஆகிய வற்றை அரசு முழுமையாக கண்காணிக்க வேண்டும்.

மத்தியில் உள்ள பாஜக கூட்டணி அரசு உரிய நிதி அளிக்காமல் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. ஆனால் இதை வாதாடி பெறும் நிலையில் கூட தமிழக அதிமுக அரசு இல்லை. எஜமான விசுவாசத்துடன் நடந்து கொள் கின்றனர். தமிழகத்திற்கு  கிடைக்க வேண்டியதை பெறாமல்  அனைத்து சுமையையும் மக்கள் தலை யில் திணிக்கக் கூடாது. மொத்தத்தில் பொது முடக்கம் என்பது அரசின் முடக்கமாகவும் இருந்து விடக்கூடாது.

;