headlines

img

கருத்துரிமையை தாக்கும் யோகி

வலதுசாரிகளின் தலையில் ஓங்கிக் குட்டு வைத்திருக்கிறது இந்திய உச்சநீதிமன்றம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் கருத்துச் சுதந்திரம் என்பது விவாதத்துக்கு அப்பாற் பட்ட அடிப்படை உரிமை, அதைப் பறிப்பதைக் கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்தை திருமணம் செய்து கொள்ள விரும்புவ தாக கான்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்தியா ளர்களிடம் பேசிய காணொலி காட்சியை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததற்காக, தில்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் பிரஷாந்த் கனோஜியாவை கடந்த 8ஆம் தேதி உத்தரப்பிரதேச காவல்துறை வீடு புகுந்து கைது செய்திருக்கிறது.

இந்த நடவடிக்கைக்கு எதிராக அந்த பத்திரிகையாளரின் மனைவி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதன் மீதான விசார ணையின்போதுதான், அந்த பத்திரிகையாளர் வெளியிட்ட காணொலி காட்சி உடன்பாடு இல்லா ததாக இருக்கலாம், ஆனால் கருத்துச் சுதந்திரம் என்ற அடிப்படை உரிமையைப் பறிக்க முடியாது என கூறியிருக்கிறது நீதிமன்றம். மேலும் அந்த பத்திரிகையாளரை உடனடியாக ஜாமீனில் விடு விக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அத்து டன் காவல்துறை பின்பற்ற வேண்டிய சட்ட நடை முறைகளைப் பொருட்படுத்தாமல் அந்த துறையி னர், ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்து செயல் படுவதையும் நீதிமன்றம் விமர்சித்துள்ளது.  உத்தரப்பிரதேச காவல் துறை தில்லி அரசின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழைந்து ஒருவரை கைது செய்யும்போது, உள்ளூர் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்து முறையான ஒப்புதலுடன் செயல்பட்டிருக்க வேண்டியதை உத்தரப்பிரதேச காவல் துறை பின்பற்றவில்லை. ஜாமீனில் வெளி வர முடியாதபடி பத்திரிகையாளரைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைப்பதை ஏற்க முடியாது என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

இந்த விசயத்தில் உத்தரப்பிரதேச அரசு பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை காலை அறி வுறுத்தியது. ஆனால் அன்று மாலையே, அன்சுல் கௌசிக் என்ற மற்றுமொரு பத்திரிகையாளரை கைது செய்தது. உச்சநீதிமன்றமே சொன்னாலும் கூட அதை ஏற்க முடியாது என்று எதேச்சதிகார மாக நடந்து கொள்வதுதான் வலதுசாரிகளின் உண்மையான குணம். அதைத்தான் யோகி ஆதித்யநாத் அரசு வெளிப்படுத்தி இருக்கிறது. தமிழகத்திலும் கூட திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் ராஜராஜ சோழன் குறித்து வெளி யிட்ட கருத்திற்காக அதிமுக அரசு இரு பிரிவுக ளில் வழக்குப்பதிவு செய்திருக்கிறது. அவர் வெளிப்படுத்திய கருத்தில் மாறுபாடு இருக்க லாம், ஆனால் அதை விவாதக் களத்தில் விமர்சிப் பதை விடுத்து வழக்குப்பதிவு செய்திருப்பதும் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான ஒரு அச்சு றுத்தல் நடவடிக்கையே! இத்தகைய கருத்துரிமை பறிப்பு தாக்குதலுக்கு எதிராக முற்போக்கு, ஜன நாயக சக்திகள் உரத்து முழங்குவதன் மூலமே அரசியல் சாசனம் வழங்கும் உரிமையையும் பாது காக்க முடியும்.

;