headlines

img

ஒரு நியாயத்தின் இரண்டு பக்கங்கள்

கொரோனா வைரஸ் காரணமாக மிகக் கடு மையாக பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் ஊடகத் துறையும் ஒன்றாகும். குறிப்பாக அச்சு ஊடகத் துறை மீள முடியாத நெருக்கடியில் சிக்கியுள்ளது. 

இதைக் காரணம் காட்டி பல்வேறு ஊடக நிறு வனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. ஊதிய வெட்டு, ஊதிய நிறுத்தம் என பல்வேறு வகைகளில் ஊடகங்களில் பணி யாற்றியவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள னர். ஊருக்கெல்லாம் உண்மை நிலவரத்தை எடுத்துச் செல்லும் இவர்களது வாழ்நிலை பரிதாப கரமாக மாறியுள்ளது. 

பொது முடக்கத்தை பயன்படுத்தி பல பத்தி ரிகை மற்றும் ஊடக நிறுவனங்கள் பணியாளர்க ளை பணிநீக்கம் செய்துள்ளதை ரத்து செய்ய வேண்டுமென தேசிய பத்திரிகையாளர்கள் கூட்ட மைப்பு தில்லி பத்திரிகையாளர்கள் சங்கம், மும்பை பத்திரிகையாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது.

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ள இந்திய பத்திரிகைகள் சங்கம் பொது முடக்கம் காரணமாக கடும் நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் 1500 கோடி முதல் 1800 கோடி வரை நிலுவை வைத்துள்ளன. அச்சு ஊட கங்களுக்கு ரூ.800 கோடி முதல் ரூ.900 கோடி  வரை அரசுகள் தர வேண்டியுள்ளது. இந்தக் காலத்தில் விளம்பரங்கள் 90 சதவீதம் குறைந் துள்ளன என்று கூறியுள்ளன.

இந்த உண்மைகளை மறுப்பதற்கில்லை. ஆனால் அதே நேரத்தில் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதால்தான் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளோம். எனவே பணி வழங்கக்கோரும் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என இந்திய பத்திரிகைகள் சங்கம் கூறியிருப்பதை ஏற்க இயலாது.

தமிழகத்தில் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைத் துள்ளதோடு பல்வேறு அரசியல் கட்சித் தலை வர்களையும் சந்தித்து தங்களது கோரிக்கைகளுக் காக குரல் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

விளம்பரங்களுக்கான பாக்கியை அரசுகள் உடனடியாக தர வேண்டும். விளம்பரக் கட்ட ணத்தை அரசுகள் உயர்த்த வேண்டும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வரிவிலக்கு என்ற கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. அரசு கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதற் கான அழுத்தத்தை அரசியல் கட்சிகள் தர வேண்டும்.

ஆனால் அதே நேரத்தில் நெருக்கடியை காரணம் காட்டி தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, ஊதியங்களை வெட்டுவது என்பது பொருத்தமல்ல. குறைந்தபட்ச பணி உத்தர வாதம் மற்றும் உரிமைகள் கூட ஊடகத்துறை ஊழி யர்களுக்கு இல்லாத நிலையை உருவாக்குவது எந்த வகையிலும் அறம் அல்ல. ஊடகத்துறையை பாதுகாப்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானது ஊடகத்துறையில் பணியாற்றுவோரையும் அவர்களது குடும்பங் களையும் பாதுகாப்பதும் ஆகும்.

;