headlines

img

மேட்டை நோக்கியே பாயும் நதிகள்

வரி செலுத்துவோர் பயனடையும் வகை யில், உயர் மதிப்பு பரிவர்த்தனைகளை வருமான வரி தாக்கலின்போது குறிப்பிடத் தேவையில்லை என்று மத்திய அரசு திங்களன்று அறிவித்துள் ளது. இது வரி செலுத்துவோருக்கு புதிய சலுகை என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

முறையாக நேர்மையாக வரி செலுத்து வோரை கவுரவிக்கிறோம் என்று கூறும் மத்திய அரசு வரியை முறையாக நேர்மையாக செலுத்தா மல் ஏய்ப்பவர்களுக்கு என்ன தண்டனை வழங்கு கிறது? வருமான வரிச் சட்டப்பிரிவு 271 எச்-ன்படி ரூ.10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன் குற்ற வழக்கும் பதிவு செய்யப்படும். இது எப்படி வரி ஏய்ப்பு குற்றவாளி களுக்கு பெரிய தண்டனை என்று அரசு நினைக் கிறது? ஆனால் வரி ஏய்ப்பு செய்கிறவர்கள் எல்லாம் விஐபிகளாக தானே வலம் வருகிறார்கள்.

வரிகள் என்பது அரசாங்க நிர்வாகத்தில் நிதி ஆதாரத்துக்கான வருமானம் மற்றும் செல்வ வளத்தின் சமத்துவமின்மையை குறைப்பதற்கும் தேவையானதாகும் என்கிறது வருமான வரிச்சட்டம். நாட்டின் 77.4 சதவீத சொத்து வெறும் 10 சதவீதம் பேரிடம் குவிந்திருக்கிறது. ஆனால் 60 சதவீதத்திற்கும் அதிகமானோரிடம் வெறும் 4.7 சதவீதம் சொத்துக்களே இருக் கின்றன. 

உலகமயமாக்கல் கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்ட பின்பு பணக்காரர்கள் அதிகம் லாபம் ஈட்டும் சூழ்நிலையுமே, ஏழைகள் மேலும் ஏழைகளாகும் சூழ்நிலையே நிலவுகிறது. 1985ஆம் ஆண்டு வரை இந்தியாவில் ஏகபோக கட்டுப்பாடு வர்த்தக நடைமுறைச் சட்டம் (எம்ஆர்பிடிஏ) அமலில் இருந்தது. அந்தக் காலத்தில் செல்வ வரிவிதிப்பு நடைமுறையில் இருந்தது. பின்னர் கைவிடப்பட்டது. பெரு முதலாளிகள் ஏக போக மற்றும் கார்ப்பரேட்டுகளாக வளர்ந்துள்ளனர்.

உலக நாடுகள் பலவற்றிலும் செல்வ வரி அல்லது எஸ்டேட் வரி பெரும் பணக்காரர்களி டம் வசூலிக்கப்படுகிறது. அமெரிக்காவில் 11 மில்லியன் டாலருக்கு மேல் சொத்துள்ளவர்க ளுக்கு 40 சதவீத வரியும், ஜப்பானில் 55 சதவீத மும், தென்கொரியாவில் 40 சதவீதமும் கூடுதல் வரியாக வசூலிக்கப்படுகிறது. இந்தியாவிலும் இத்தகைய வரி விதிப்பு முறையை கடைப்பிடிக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீண்டகாலமாகவே வற்புறுத்தி வருகிறது.

இத்தகைய நேரடி வரி வசூல் முறையை அமல்படுத்துவதை விட்டுவிட்டு சாதாரண ஏழை, எளிய மக்களிடம் மறைமுக வரியை அதிக பட்சமாக வசூலிப்பதிலேயே மத்திய அரசு தீவி ரமாக உள்ளது.அதனால்தான் பெட்ரோல், டீசல் விலையை ஏறத்தாழ தினசரி உயர்த்தி சாதாரண மக்களை மேலும் வாட்டி வதைக்கிறது. சுதந்திர இந்தியாவில் நதிகள் எல்லாம் பள்ளத்தை நோக்கி பாய்வதைவிட மேட்டை நோக்கியே செல்கின்றன என்று ஒரு கவிஞர் குறிப்பிட்டதைப் போலவே இந்த அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் மாற்றம் வந்தாலன்றி மக்களின் வாட்டம் தீராது.

;