headlines

img

இன்னுமொரு தேசிய  தகுதித் தேர்வா?

 கொரோனா வைரஸ் தொற்றினைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள் ளதாக இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. 23சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் 27 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டும் 11.4 கோடி பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரி வித்துள்ள அந்த அமைப்பு தமிழகத்தில் 49.2 சதவீதம் பேரின் வேலை பறிபோயுள்ளதாக தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்கு மத்தி யில் உள்ள பாஜக கூட்டணி அரசு எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை. வேலையின்மை என்பது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள் ளது. இந்த நிலையில் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் மத்திய அமைச்சரவை ஒரு முடிவினை எடுத்துள்ளது.  

மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான பணியாளர்களை நிரப்ப தேசிய அள விலான தகுதி தேர்வு நடத்தப்படும் என்றும் ஒவ் வொரு துறையின் வேலைவாய்ப்புக்கும் இனி தனித்தனியாக தேர்வு எழுதத் தேவையில்லை என்றும் மத்திய அமைச்சரவை முடிவு செய்துள் ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  என்ஆர்ஏ எனும் தேசிய பணியாளர் தேர்வு முகமை உருவாக்கப்பட்டு, தேசிய அளவிலான தகுதி தேர்வு நடத்தப்படும் என்றும் இதில் பெறும்  மதிப்பெண்கள் மூன்றாண்டுகளுக்கு செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. பொதுவாக நீட் உட்பட தேசிய அளவிலான தேர்வுகள் முறைகேடுகளின் வடிவமாகவே உள்ளது. தமிழகம் உள்ளிட்ட மாநி லங்கள் புறக்கணிக்கப்படுவதும் நடந்துவருகிறது. இந்த நிலையில் முதல் கட்டமாக பனிரெண்டு மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்ற அறி விப்பு ஆழமான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும் என்பதுதானே பொருத்தமாகவே இருக்கும். மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் மொழிபெயர்ப்பில் நடந்த குளறுபடிகள், அதை சரிசெய்ய அரசு மறுத்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது. மேலும் ஒரு சில மொழிகளை மட்டும் புகுத்தி மற்ற மாநில மாணவர்களை புறக்கணி க்கும் திட்டம் இருக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் இதில் பெறும் மதிப்பெண்கள் மூன்று ஆண்டுகளுக்கு இருக்கும் என்ற நிலையில் முறை கேட்டுக்கும், லஞ்ச ஊழலுக்கும் வழிவகுக்க வாய்ப்பு ஏற்படும்.  இந்த திட்டம் மூலம் கோடிக்கணக்கான இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமென்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பல்வேறு மத்திய அரசு துறைகளில் வேலை நியமனத்திற்கு தடை இருக்கும் நிலையில், ரயில்வே உள்ளிட்ட முக்கிய மான பொதுத் துறைகளை தனியாருக்கு தந்து வரும் நிலையில் எங்கிருந்து புதிய வேலைவாய்ப்பு களை உருவாக்கப்போகிறார் என்ற கேள்வி எழுவது இயல்பே. அதிகரித்து வரும் வேலையின்மையை மறைக்கவும், தகுதித்தேர்வு என்ற பெயரில் மோச டிக்கு வழிவகுக்கவுமே இந்த அறிவிப்பு பயன் படும். இப்போதைய தேவை புதிய வேலைவாய்ப்பு களை உருவாக்குவதே ஆகும்.

;