headlines

img

மேலும் ஒரு துல்லிய தாக்குதல்

இந்தியப் பொருளாதாரம் கடும் நெருக்கடி யில் சிக்கித் தவிக்கிறது. நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5சதவீத மாக வீழ்ச்சி அடைந்துள்ளது.  மொத்த உள்நாட்டு உற்பத்தி மட்டுமின்றி பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் அனைத்து காரணிகளும் எதிர்மறையாகவே உள்ளன. வேளாண் துறையின் வளர்ச்சி 5.1சத வீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைந்துள்ளது. ரியல் எஸ்டேட் துறை கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 9.6சதவீதம் இருந்த நிலை யில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.7சதவீதமாக சரிந்துள்ளது. வேலையின்மை யின் அளவு கடந்த 45 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 

நகர்ப்புறத்தில் மட்டுமின்றி கிராமப்புறத் திலும் மக்களின் வாங்கும் சக்தி அதல பாதா ளத்தில் விழுந்துள்ளது. இதனால் சந்தையில் பொருட்களுக்கான கிராக்கி குறைந்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசிடம் இந்த நிலைமையை சமாளிப்பதற்கான எந்தத் திட்டமும் இல்லை. மாறாக, ரிசர்வ் வங்கியின் இருப்புத் தொகையை சூறையாடுவது, வேலை யின்மையை அதிகரிக்கும் வகையில் பொதுத்துறை வங்கிகளை இணைப்பது என கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறத்தில் இந்திய மக்கள் மீது மோடி அரசு நாளுக்கு நாள் துல்லிய தாக்குதல் நடத்தி வரு கிறது. அனைத்து அத்தியாவசியப் பொருட் களின் விலையும் உயர்ந்துள்ள நிலையில், மேலும் ஒரு இடித்தாக்குதலாக சமையல் எரி வாயு விலை சிலிண்டருக்கு ரூ.16 உயர்த்தப் பட்டுள்ளது. 14 கிலோ எடையுள்ள மானிய விலை  சிலிண்டர் ரூ.590.50யிலிருந்து ரூ.606.50ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

வணிக பயன்பாட்டிற்கான 19கிலோ எடை யுள்ள சிலிண்டர் விலை ரூ.51.50 உயர்த்தப் பட்டுள்ளது. காலப்போக்கில் சமையல் எரிவாயுக் கான மானியத்தை முற்றாக ரத்து செய்துவிட்டு அனைவரும் வர்த்தகப் பயன்பாட்டிற்கான சிலிண்டரை வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் மோடி அரசின் திட்டம். அதை நோக்கிய நகர்வாகவே சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றனர். வழக்கம்போல சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்துவிட்டதால் இந்த மாதமும் சிலிண்டர் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாததாகி விட்டது என விளக்கம் அளிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் விலை குறைந்தபோதும் கூட இவர்கள் ஒருபோதும் விலையைக் குறைத்த தில்லை. 

பெட்ரோல், டீசல் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மொத்தத்தில் இன்னும் 5 ஆண்டு காலம் இந்த நாட்டை நாசம் செய்வதற்கு மக்கள் அனுமதி அளித்துவிட் டார்கள் என்ற மதர்ப்பில் மக்களுக்கு எதிராக ஒரு யுத்தத்தை மோடி அரசு தொடுத்து வருகிறது. சமையல் எரிவாயு விலை உயர்வு மக்களின் வாழ்வை மேலும் துன்பமயமாக்கும். ஆனால் அது குறித்து ஆள்வோர் கவலைப்படமாட்டார் கள். ஏனெனில் கார்ப்பரேட்டுகள் மனம் குளிர்ந்தால் அவர்களுக்கு போதும்.

;