headlines

img

அகதிகளின் குரல்...

உணவு, குடிநீர், சுத்தமான காற்று போன்ற தேவைகளுக்காக தினமும் போராடி வரும் மனிதன் உயிர் வாழ்வதற்காக அகதிகள் என்ற முத்திரையோடு அலைக்கழிக்கப்படும் அவலம் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. அகதி என்பவர் யார்? எளிதாகச் சொல்லவேண்டுமானால் நாடுகளுக்கு இடையிலான போர் அல்லது உள்நாட்டுப் போர் அல்லது வாழும் நாட்டில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலை ஆகியவற்றால் உயிர் பிழைக்க வேற்று மண்ணை நாடும் நிலையில் இருப்பவரை அகதி எனலாம். உடை கட்டுப்பாடு வாழ்க்கைத் துணைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மறுப்பு போன்ற காரணத்துக்காக ஒரு பெண் வேறு நாட்டில் தஞ்சமடைந்தாலும் அவரை அகதியாகக் கருதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது  சர்வதேச விதிமுறை. போர், துன்புறுத்தல் அல்லது தீவிரவாதம் போன்றவற்றிலிருந்து தப்பிக்க, ஒவ்வொரு நிமிடமும் 20 பேர், எல்லாவற்றையும் விட்டு விட்டு உயிரை மட்டும் சுமந்துகொண்டு வாழ்விடத்தைவிட்டு வெளியேறுகின்றனர். உலக அகதிகளில் 86 சதவீதத்தினர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள். 51 சதவீத அகதிகள் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்கிறது ஐ.நா. அறிக்கை.

உலகளவில் சுமார் 9.5 கோடி மக்கள் அகதிகளாக இருக்கிறார்கள். இன்றைக்கு மொத்த அகதிகளில் 60 சதவீதம் பேர் ஆப்கானிஸ்தான், சோமாலியா, இராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள். உலகில் அதிக அகதிகளைத் தோற்றுவிக்கும் நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது. சிரியாவில் நடக்கும் உள்நாட்டு போரால் அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்தவர்கள் 40 லட்சம் பேர். திபெத், வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மர் நாடுகளில் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்தியாவிற்குள் நுழைந்திருக்கிறார்கள். உலகின் மொத்த அகதிகளில் வெறும் 0.6 சதவீதம் பேர்தான் இங்கிலாந்தில் இருக்கிறார்கள். இந்தியாவில் 37 லட்சம் பேரும், சீனாவில் 36 லட்சம் பேரும் நேபாளத்தில் 26 லட்சம் பேரும் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாத அகதிகளாக உள்ளனர் என்று ஜெனிவாவில் இயங்கும் புலம் பெயர்ந்தவர்களுக்கான கண்காணிப்பு மையம் தெரிவிக்கிறது. இந்தியாவில் உள்ள அகதிகளில், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையால் அகதியானவர்கள் வங்கதேசப் போர், ஆப்கானிஸ்தான் போர் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார். திபெத் அகதிகள், பர்மா அதிகள், இலங்கைத் தமிழர்கள் ஆகியோர் இதில் முக்கியமானர்கள். 54 நாடுகளில் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வாழ்கின்றனர். உலகின் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் இலங்கைத் தமிழர்கள் என்று ஐ.நா.வின் யுனிசெப் அறிக்கை கூறுகிறது. இலங்கையில் 1983-ல் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலக்கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வந்தனர். தமிழகத்தில் 117 அகதிகள் முகாம்களில் சுமார் 70 ஆயிரம் பேர் உள்ளனர். மேலும், 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காவல்நிலையங்களில் பதிவு செய்துவிட்டு, வெளியிடங்களில் வசித்து வருகின்றனர்.

;