headlines

img

குடியரசின் சபதம்!

இந்தியாவின் 74ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. மதச்சார்பற்ற சோச லிச குடியரசு என்று பொறிக்கப்பட்டுள்ள, இந்திய  மக்கள் தங்களுக்கு தாங்களே ஆள்வது என்ற பிரகடனத்துடன் உருவாக்கப்பட்ட அரசியல மைப்புச் சட்டம் இன்றைய ஆர்எஸ்எஸ்-பாஜக ஆட்சியாளர்களின் கைகளில் சிக்கி மிகப் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பின்ன ணியில், இந்தியக் குடியரசை என்ன விலை கொடுத்தேனும் பாதுகாப்போம் என்ற உறுதியை ஒட்டு மொத்த இந்திய மக்களும் இன்றைய தினம் எடுத்துக் கொள்கிறார்கள்.

இந்திய குடியரசின் அரசியலமைப்புச் சட்ட அடிப்படையிலான விழுமியங்களும், அடித் தளங்களும் மிகத் தீவிரமாக மோடி தலைமை யிலான பாஜக அரசால் அரிக்கப்பட்டு, தாக்குத லுக்கு உள்ளாகி வருகின்றன என்பதை அப்பட்ட மாக வெளிப்படுத்தும் விதத்தில்தான் கடந்த சில நாட்களாக உச்சநீதிமன்றத்தின் சுதந்திரத்தை குறிவைத்தும், பிபிசி ஆவணப்பட விவகாரத்தில் உண்மைகளை அறிந்து கொள்ளும் நாட்டு மக்க ளின் உரிமைகள் மற்றும் பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றை குறி வைத்தும் பாஜக அரசு நடத்தி வரும் தாக்குதல்கள் அமைந்துள்ளன.

ஏற்கெனவே அரசியலமைப்புச் சட்ட நிறுவ னங்களாக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் நாடாளுமன்றம், தேர்தல் ஆணையம், மத்திய  விசாரணை முகமைகள் உள்ளிட்ட அனைத்தும் மோடி அரசால் கைப்பற்றப்பட்டு அவற்றின் சுயேச்சைத் தன்மையும், சுதந்திரமும் பறிக்கப் பட்டுள்ளன. இந்த நிலையில், உச்சநீதிமன்ற கொலீஜியம் அமைப்பின் சில குறைபாடுகளை முன்வைத்து, நீதிபதிகளை நேரடியாக நாங்களே நியமிப்போம் என்ற அளவிற்கு ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தொடர்ந்து மிரட்டி வருகிறார். இது நீதித்துறை அமைப்பையே முற்றாக தங்கள் வசப்படுத்துவதற்கான தீவிர மான முயற்சியே ஆகும்.

2002ல் குஜராத்தில் முஸ்லிம் மக்களுக்கெ திராக ஏவிவிடப்பட்ட கொடிய இனப்படுகொலை யில் அன்றைய முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடிக்கு நேரடித் தொடர்பு உண்டு என பிபிசி ஆவணப் படம் ஆதாரப்பூர்வமாக நிறுவியுள்ளது. அந்தப் படத்தை திரையிடவிடாமல் சமூக ஊடகங் கள் உள்பட அனைத்திலிருந்தும் தடை செய்துள் ளது மோடி அரசு. அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரம், பத்தி ரிகை சுதந்திரம் உள்ளிட்டவை கொடிய அடக்கு முறைக்கு உள்ளாகியிருப்பதை கடந்த சில நாட்க ளாக, பிபிசி ஆவணப் பட விவகாரத்தில் இந்த நாடு பார்த்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் தடைகளை மீறி மாணவர்கள், இளைஞர்கள் பொதுவெளியில் பிபிசி ஆவணப்படத்தை திரை யிட்டு மோடி அரசை அம்பலப்படுத்தி வருகிறார் கள். ஆனால் அத்தகைய நிகழ்வுகளில் உள்ளே புகுந்து ஆர்எஸ்எஸ்- பாஜக குண்டர்கள் தாக்குத லிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். அனைத்து வகையி லும் அரசியலமைப்புச் சட்டத்தில் விழுமியங்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த குடியரசு நன்னாளில் சபதமேற்போம். 

 

;