headlines

img

நீதித்துறையின் முரண்

புகையிலைப் பொருட்கள் மனிதர்களின் உடல் நலனுக்கு எதிரானது. இதனால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர்.புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல வகை புற்றுநோய்களும், ஆஸ்துமா, நீரிழிவு நோய் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இதை உலக சுகாதார நிறுவனமும்,  இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழுவும் (ஐ.சி.எம்.ஆர்)  உறுதி செய்திருக்கின்றன. 

புகையிலைப் பொருட்களின் பயன் பாட்டிலிருந்து இளைய தலைமுறையினரைப் பாதுகாக்க வேண்டியுள்ளது.  எனவேதான் உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்க ளுக்குத் தடை விதித்து தமிழக உணவு பாதுகாப்பு  ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்த ரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது முரண்பாடாக உள்ளது. அதே போல, அந்த அறிவிப்பாணையின் அடிப்படை யில் எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

பொதுநலன் கருதி மாநில அரசின் இது போன்ற உத்தரவுகளைப் பாதுகாக்கவேண்டிய உயர்நீதிமன்றம், எதிர்த் தரப்பினரின் வாதத்தை ஏற்றுக்கொண்டு அந்த பொருட்கள் மீதான தடை சட்டத்தை ரத்து செய்திருப்பது ஏற்புடையதல்ல. சமூகத்தைப் பாதிக்கும் பிரச்ச னைகளை ஊடகங்கள் சுட்டிக்காட்டும்போது நீதிமன்றங்களே தாமாக முன்வந்து விசார ணைக்கு எடுத்துக்கொள்கின்றன. ஆனால் முரண்பாடாக குட்கா, ஆன்லைன் சூதாட்டம் போன்ற விஷயங்களில் நீதிமன்றங்களின் சமீபகால உத்தரவுகள் ஒருதலைப்பட்சமாகவே உள்ளன. சமூகப் பாதிப்பு, மக்களின் ஆரோக்கியம் என அனைத்து கோணங்களையும் அலசி ஆராய்ந்து அளிக்கப்பட்ட தீர்ப்பாகத் தெரியவில்லை.  

புகையிலை என்பது உணவுப் பொருள் அல்ல என்ற புகையிலை நிறுவனங்களின்  வாதத்தை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.  மெல்லும் பொருட்கள் அனைத்தும் உணவுப் பொ ருட்கள் தான் என்பதால் புகையிலையும் உணவுப் பொருள் தான் என்று தெலுங்கானா உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்திருப்பதை சென்னை உயர்நீதி மன்றம் கருத்தில் கொள்ளாதது ஆச்சரியம ளிக்கிறது. சமூகத்தை அழிக்கக்கூடிய ஒருசெய லுக்கு நீதிமன்றமே துணை போகலாமா? 

பான்மசாலா, குட்கா போன்றவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் ஒரு சமூகத்தையே அழிக்கின்றன. ஆரோக்கியமான சமூகத்திற்கு சவால் விடும் இந்த தயாரிப்புகளை மாநில அரசு தடை செய்தது சரியானதே. இந்த தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு சட்ட வல்லு நர்களுடன் ஆலோசிக்கப்பட்டு  வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பது வரவேற்கத் தக்கது.  உச்சநீதிமன்றத்தில்  வலுவான வாதங்க ளை முன்வைத்து தடையுத்தரவை பாதுகாக்க வேண்டும்.

;