headlines

img

அரசு பள்ளிகளுக்கு  நிதி ஒதுக்கீடு செய்க...

கொரோனா நெருக்கடிக் காலத்திலும் ஏழை, எளிய மாணவர்களின் கல்வியை  அரசுப் பள்ளிகளே உறுதிப்படுத்தியிருக்கின்றன. இந்த ஆண்டுமட்டும் அரசுப் பள்ளிகளில் 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்திருக்கின்றனர். அரசுப் பள்ளிகளின் அருமை காலத்தே  முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

கல்வியை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட கோத்தாரி தேசியக் கல்விக் குழுவானது 1966-ல்தாக்கல் செய்த  713 பக்க அறிக்கையில், ‘கல்விக்காகஜி.டி.பி-யில் ஆறு சதவிகிதம் ஒதுக்க வேண்டும்’என்று பரிந்துரைத்தது. பரிந்துரை 54 ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக மோடி பிரதமராகப் பதவியேற்ற பின்னர் படிப்படியாகக் குறைக்கப்பட்டே வருகிறது.இந்த சூழலில் தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றுக்கிடையில் நீதிமன்ற உத்தரவுடன்,  தனியார் பள்ளிகள் நடத்தும் இணையவழிவகுப்பு கட்டாயம் என்ற சூழலுக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆண்ட்ராய்டு போன், டேட்டா ரீசார்ஜ் போன்ற வார்த்தைகளையே புதிதாகக் கேட்கும் ஏழைப்பெற்றோர்கள் பலர் விழி பிதுங்கி நிற்கின்றனர். இதற்கிடையில் தான் ஆண்ட்ராய்டு போனுக்காக சகோதரிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நித்ய ஸ்ரீ என்ற மாணவிதற்கொலை செய்து கொண்டுள்ளார்;  ஆண்டிபட்டியில் ஆன்லைன் வகுப்பு புரியாத மாணவன்இளங்கோ தற்கொலை செய்திருக்கிறார் என்ற அதிர்ச்சிச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், தனியார்ப் பள்ளிகளிலிருந்து மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் வரும் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்கக் கூடாது என தனியார்ப் பள்ளிகள் சங்கம் மிரட்டுகின்றன. அதாவது முழு கல்விக் கட்டணத்தைக் கட்டினால் மட்டுமே மாற்றுச்சான்றிதழ் தரமுடியும் எனபல பள்ளிகள் மாணவர்களை அலைக்கழிக்கின்றன. ஆனால்  அரசோ நீதிமன்றமோ இதுவரை தானாக முன்வந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளஇணையதள இணைப்பு  கிடைக்காத பிரச்சனைகளால் வீடுகளின் கூரைகளில் அமர்தல், மலை உச்சிக்கு செல்லுதல் போன்ற பலச் சாகசங்களை நிகழ்த்தி வருகின்றனர். இதற்கும் வாய்ப்புகளற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மன அழுத்தம் குறித்தொல்லாம் தமிழக அரசுக்குஎந்த அக்கறையும்  இருப்பதாகத்தெரியவில்லை.இந்த சூழலில்தான் அரசுப் பள்ளிகள்அனைத்து மாணவர்களுக்கும் ஏற்றத்தாழ்வற்றசமமான கல்வியை வழங்கி வருவது கவனம்பெற்றிருக்கிறது. மாநில அரசோ இந்தாண்டுபட்ஜெட்டில் தனியார்ப் பள்ளிகளில் படிக்கும்ஏழை மாணவர்களுக்கு ரூ. 304 கோடியை ஒதுக்கியிருந்தது. அதேபோன்ற நிதியை அரசுப்பள்ளிகளின்கட்டமைப்பிற்கு செலவழித்திருந்தால் வருடம்தோறும் கூடுதலான மாணவர்கள் படிக்கும் வாய்ப்பை உத்தரவாதப்படுத்தியிருக்கலாம்.  அரசுப் பள்ளிகள் வலிமையாக இருந்தால் தான் அனைத்து மாணவர்களுக்கும் சமத்துவமான, தரமான கல்வியை வழங்க முடியும்.

;