headlines

img

தேசிய அவமானம்!

இந்தியாவின் தங்க மங்கைகள் தங்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் பாலியல் துன்புறுத்த லுக்கு  நீதி கேட்டு தலைநகர் தில்லியில் போராடி வருகின்றனர். இந்த போராட்டம் ஒரு மாதத்தைக் கடந்தும் தொடர்கிறது. இந்த நிலையிலும் ஒன்றிய மோடி அரசு கொஞ்சமும் வெட்கமின்றி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய பாஜக எம்பி பிரிஷ் பூஷணை பாதுகாத்து வருகிறது.  இது விளையாட்டு வீரர்களுக்கு இழைக்கப்படும்  அநீதி மட்டுமல்ல. இந்தியத் தேசமே வெட்கி தலைகுனியும் தேசிய அவமானமும் ஆகும்.

கடந்த 5 மாதத்திற்கு முன்பே மல்யுத்த வீராங் கனை வினேஷ் போகாட் இந்திய மல்யுத்த சம்மே ளனத்தலைவர் பிரிஜ் பூஷண் சிங், பெண் மல் யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் கொடுப்பதாகக் கண்ணீர்  மல்க புகார் தெரிவித்தார். இதனை விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அடுத்த 4 வாரங்களுக்குள் விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டது. ஆனால் அந்த குழு 6 வாரங்கள்எடுத்துக் கொண்டு அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது. 

ஆனால் சட்ட விதிகளின்படி பாலியல் துன் புறுத்தலுக்கு உள்ளானவர்களுக்கும் அதன் அறிக்கை தரப்பட வேண்டும். ஆனால் தற்போது வரை அந்த அறிக்கை பாதிக்கப்பட்ட வீராங்கனை களுக்குத் தரப்படவில்லை. அதில் என்ன இருக்கி றது? என்ன முடிவு எடுக்கப்பட்டது? எல்லாமே மர்மமாகவே இருக்கிறது. ஆனால் காவல்துறைக் கும், விளையாட்டு அமைச்சகத்திற்கும் வழங்கப் பட்டிருக்கிறது. இது அப்பட்டமான சட்டமீறல் ஆகும். 

மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் கேட்டுக் கொண்டதன்படி மல்யுத்த சம்மேளன தலைவரை பதவியிலிருந்து மாற்றியிருக்க வேண்டும். மாற்ற வேண்டும் என்றே சட்டம் கூறுகிறது. ஆனால் ஒன்றிய அரசு அதனை மீறுகிறது. இதுதான் ஒன்றிய பாஜக அரசு பெண்களைப் பாதுகாக்கும் லட்சணம்! குற்றச்சாட்டிற்கு உள்ளாகியிருக்கும் பிரிஜ்பூஷண்சிங் ஒன்றும் உத்தம புத்தரல்ல. பாபர் மசூதி இடிப்பு துவங்கி, கொலை, தீவைப்பு, நாசவேலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீது இருக்கிறது. இந்த யோக்கி யரைக் காப்பாற்றும் பாஜகவின் தேச பக்தி  நமது நாட்டிற்காக வெற்றிப் விளையாடி நாட்டிற்காக பதக்கங்களைக் குவித்த வீராங்கனைகளை காவு கொடுக்க துடிக்கிறது. 

2012 முதல் 2022 வரையில் பிரிஜ் பூஷண்   மீது 10க்கும் அதிகமான பாலியல் துன்புறுத்தல் புகார் வந்திருக்கிறது. ஆனாலும் நடவடிக்கையில்லை.  தற்போது ஒரு சிறுமி உள்ளிட்டு 7 பேர்  கொடுத் திருக்கும் புகாரின் மீதும் நடவடிக்கை எடுக்க வில்லை. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு தலையிட்ட பின்ன ணியில் தான் போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளில்  வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் விளையாட்டு வீரர்கள் நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு ஆதரவாக மாதர் சங்கம், விவ சாய அமைப்புகள் மற்றும்  காப் பஞ்சாயத்துகளின் பிரதிநிதிகளும்  களமிறங்கியுள்ளனர். அவர்க ளோடு இந்த தேசமும்  நீதிக்காக கரம் கோர்க்க வேண்டும். 

;