முதன்மை குற்றவாளி மோடி அரசே!
மோசடிப் பேர்வழி நீரவ் மோடியின் சகோதரர் நேஹால் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். இது வெறும் ஒரு தனிநபர் கைது அல்ல. இது இந்தியாவின் நிதித் துறையில் நடந்த மிகப்பெரிய மோசடியின் ஒரு முக்கிய மான அத்தியாயம். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,578 கோடி ரூபாய் மோசடியின் பின்னணியில் இருந்த கும்பலில் இப்போது தான் ஒருவர் சிக்கி யுள்ளார்.
நீரவ் மோடிக்கும் நேஹால் மோடிக்கும் இடையிலான உறவு வெறும் சகோதர பந்தம் மட்டுமல்ல, இது ஒரு ‘நன்கு ஒழுங்கமைக்கப் பட்ட’ குற்றவியல் கூட்டமைப்பு. நேஹால் மோடி தனது சகோதரின் சார்பாக போலி நிறுவனங்கள் மூலம் 50 மில்லியன் டாலர் பெற்றது, ஹாங்காங் மற்றும் துபாயிலிருந்து 6 மில்லியன் டாலர் மதிப்புள்ள வைரங்கள் கடத்தியது, 150 பெட்டிகள் முத்துக்கள் மற்றும் 50 கிலோ தங்கம் கடத்தியது, டிஜிட்டல் ஆதாரங்களை அழித்தது, மேலும் சாட்சிகளை மிரட்டி அவர்களது பாஸ்போர்ட்டு களை பறித்தது என பல குற்றங்களில் ஈடுபட்டவர்.
அதிர்ச்சியூட்டும் விவரம் என்னவென்றால், நேஹால் மோடி சாட்சிகளுக்கு 20 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து பொய் சாட்சியம் சொல்ல முயன்றது. இது இந்திய நீதித்துறை மீதான நேரடி தாக்குதல். ஒரு நபர் தன் பணத்தின் பலத்தில் நீதியையே வாங்க முயலும்போது, அது ஜன நாயகத்தின் அடித்தளத்தையே குலைக்கிறது.
ட்டப்பட்டாலும், இது உண்மையில் மோடி அரசின் தோல்வியின் ஒரு பகுதியே. கேள்வி என்னவென்றால், இவ்வளவு பெரிய மோசடிகள் நடந்தபோது மோடி அரசு எங்கே இருந்தது? ஏன் இவர்களை நாட்டைவிட்டு வெளியேற அனுமதித்தது? விஜய் மல்லையா 9,000 கோடி மோசடி செய்துவிட்டு இங்கிலாந்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். நீரவ் மோடி பஞ்சாப் நேசனல் வங்கியில் 13,578 கோடி மோசடி செய்துவிட்டு ஒரு தீவில் ஒளிந்து கொண்டிருந்தார். லலித் மோடி ஐபிஎல் மற்றும் வரி மோசடி செய்துவிட்டு லண்டனில் வசிக்கிறார். மெகுல் சோக்சி பஞ்சாப் நேசனல் வங்கியில் பணத்தை சூறையாடி விட்டு ஆன்டிகுவாவில் புகலிடம் பெற்றுள்ளார். சந்திர கோசல் கன்னா அலகாபாத் வங்கியில் மோசடி செய்துவிட்டு லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இவர்கள் அனைவரும் மோசடி கண்டுபிடிக்கப் பட்ட பிறகும் மாதக்கணக்கில் நாட்டில் சுதந்திரமாக சுற்றித்திரிந்தனர். அவர்களுக்கு நாட்டைவிட்டு வெளியேற போதிய நேரம் கொடுக்கப்பட்டது. இதில் முதன்மைக் குற்றவாளி மோடி அரசுதான்.
இத்தகைய பின்னணியில், நேஹால் மோடியின் கைது ஒரு முக்கியமான நிகழ்வு. இந்திய மக்களின் சேமிப்புப் பணத்தைச் சூறையாடி மொத்தக் கும்பலும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். இதற்கான குரலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலுவாக எழுப்பி வருகிறது. அனைத்து மக்கள் இயக்கங்களும் குரல் எழுப்ப வேண்டும்.