headlines

img

ஏன் இந்த அவசரம்?

நாட்டில் பொது முடக்கம் நடைமுறையில் உள்ள இந்த நாட்களில் யமுனை நதி சுத்தமாகி கொண்டிருப்பதாக செய்திகள் ஊடகங்களில் பரப்பப்படுகின்றன. ஆனால் வேறு சில அபாய கரமான செய்திகள் சத்தமின்றி முடக்கப்படு கின்றன. அவற்றில் முக்கியமானவை, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்ற அமைச்சகம் அனுமதியளித்துள்ள 30 திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. 

ஆனால் தற்போது இயற்கை பாதுகாப்பு மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு ஆகியவை தொடர்பான விதிகளுக்கு புறம்பாக, போதிய நடைமுறைகளை பின்பற்றாமல் அனுமதியை அளித் துள்ளது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. மேற்கண்ட திட்டங்கள் அனைத்தும் தனியார் திட்டங்களாகவே இருப்பதுதான் மத்திய அரசின் இந்த அவசரமான அனுமதியளித்தலுக்கு முக்கியமான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

அருணாச்சல பிரதேசத்தில் திபாங் பள்ளத் தாக்கில் எட்டலின் நீர் மின்திட்டம், அசாமில் டெகிங் பட்காய் யானை ரிசர்வ் பகுதியில் நிலக்கரி சுரங்கத் திட்டம், கோவாவில் மகாவீர் சரணா லயம் வழியாக நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம், கிர் தேசிய பூங்கா வழியாக சுண்ணாம்பு கல் சுரங்கம் அமைக்கும் திட்டம், கர்நாடக மாநி லத்தில் ஷராவதி சரணாலயத்தில் புவியியல் தொழில்நுட்ப மையம் அமைக்கும் திட்டம் ஆகியவை இந்த 30 திட்டங்களில் முக்கியமா னவை ஆகும்.

இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதால் 15 புலிகள் ரிசர்வ் பகுதி, சரணாலயங்கள், சுற்றுச் சூழல் உணர்திறன் மண்டலங்கள் மற்றும் மிக பெரு மளவிலான வனப்பகுதிகள் நாசமாகும். இந்த திட்டங்களை அமைப்பதால் ஏற்படும் பாதிப்பு கள் என்னென்ன என்பதை பற்றி கள ஆய்வுகள் நடத்தி அதன் பிறகே மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி வழங்க வேண்டும். ஆனால் இந்த கொரோனா கால பொது முடக்க சூழலை பயன்படுத்தி அத்தகைய கள ஆய்வுகள் ஏதும் நடத்தப்படாமலேயே இந்த திட்டங்க ளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த நடவடிக்கைக்கெதிராக அறிவியலாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாது காப்பு வல்லுனர்கள் அடங்கிய குழு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சருக்கு ஒரு நீண்ட கடிதத்தை எழுதி யுள்ளது. குறிப்பாக அருணாச்சலப் பிரதே சத்தில் எட்டலின் நீர் மின் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். 

கொரோனா கால பாதிப்புகளை சரிசெய்வ தற்காக என்று கூறி மத்திய நிதியமைச்சர் பரிந்து ரைத்த பல்வேறு நடவடிக்கைகளில் தனியார் மயம்தான் தூக்கலாகத் தெரிந்தது. அந்த அடிப்படையிலேயே இத்தகைய தனியார் திட்டங்களுக்கும் மத்திய அமைச்சகத்தின் அனுமதி அதன் வழக்கமான நடைமுறை களை மீறி அவசர அவசரமாக வழங்கப்பட்டி ருக்கிறது. இயற்கையை வன வளத்தை பல்லுயிர் பாதுகாப்பை வன மக்களின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு மேற்கண்ட திட்டங்க ளுக்கான அனுமதியை மத்திய அரசு மறு பரிசீலனை செய்வதும், கைவிடுவதும் மிகவும் அவசரமும் அவசியமாகும்.

;