headlines

img

ஆரம்பத்திலேயே கிள்ளியெறியவேண்டும்....

அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவது, மதுராவில் மசூதியை இடித்து கிருஷ்ணர் கோவிலை விரிவாக்குவது, காஷ்மீர் மாநிலத்திற்கான அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை நீக்குவது,  பொது சிவில்சட்டத்தை கொண்டுவருவதுஆகியவை ஆர்எஸ்எஸ்சின் செயல்திட்டங்கள்.  இதில் இரண்டு நிறைவேற்றப்பட்டுவிட்டது.

அயோத்தியில் 500 ஆண்டு பழைமையான பாபர் மசூதி  இடித்து தரைமட்டமாக்கப் பட்டு ராமர் கோவிலுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது. இதற்குத் தடையாக இருந்த நீதிமன்றவழக்கையும் இந்துத்துவா சக்திகள் தங்களுக்குச்சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. பாபர் மசூதி  இருந்த இடம் ராமர் கோவில் அறக்கட்டளைக்குச் சொந்தம் என்றும் அந்த இடத்தில் தான்ராமர் பிறந்தார் என்றும் நீதித்துறையைச் சொல்ல வைத்தனர்.  விரிவாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டநிகழ்வால் மசூதி இடிக்கப்பட்டதற்கு எந்த விதநியாயமும் சொல்லாமல் அந்த இடம் ராமஜென்மபூமிக்கு சொந்தமானது என்று அதிர்ச்சியளிக்கக்கூடிய  தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்தது. இது ஒருபுறம் இருக்க அயோத்தியை அடுத்து தற்போது மதுராவை குறிவைத்துள்ளன இந்துத்துவா சக்திகள்.  

 மதுராவில் கிருஷ்ணர் கோவிலும் மசூதியும் இருக்கும் இடம் முழுவதும் இந்துக்களுக்கே சொந்தம் என்று ‘பகவான் கிருஷ்ணன்’ சார்பில் வழக்கு தொடர்ந்துள்ளன.  மதுரா நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்தவழக்கில் கிருஷ்ணர் அங்கேதான் பிறந்தார் என்ற நம்பிக்கை எப்போது உருவானது என்று சொல்லவில்லை. அயோத்தி வழக்கும் ‘பகவான் ராமர்’ பெயரில் தான் தொடரப்பட்டது.மதுரா இடம் தொடர்பாக 1968 ஆம் ஆண்டு கிருஷ்ணர் கோவில்,  அதை ஒட்டிய ஷாஹி ஈத்கா மஸ்ஜித் ஆகியவற்றுக்கும் இடையே நல்லிணக்க ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டது.  இதை ஏற்காதசிலர் அந்த ஒப்பந்தத்தைச் சட்டவிரோதம் எனஅறிவிக்கவேண்டும் என்று நிர்ப்பந்திப்பதன் மூலமாகநாட்டின் ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க முயல்கிறார்கள்.மத்திய பாஜக அரசின் நாசகர நடவடிக்கைகளால் மக்கள் பெரும் துன்பத்தில் உள்ளனர். வேளாண்துறை தொடர்பான 3 சட்டங்களை எதிர்த்து தலைநகரே ஸ்தம்பிக்கும்  வகையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசின் மீதான மக்களின் அதிருப்தியைத் திசை திருப்பும் வகையில் மதுரா பிரச்சனையை இந்துத்துவா சக்திகள்கையில் எடுத்துள்ளன. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். ‘கடவுள்’ பெயரில் வழக்கு தொடர்வது அனுமதிக்கப்படுமேயானால் நாட்டில் அமைதி சீர்குலைந்துவிடும்.

தமிழகத்தில் பல பவுத்த மடாலயங்கள் தற்போதுஇந்து கோவில்களாக உள்ளன. இந்து அரசர்கள்படையெடுத்தபோது பவுத்த மடாலயங்கள் அழிக்கப்பட்டன. காஞ்சிபுரத்தில் பல கோவில்களே இதற்குச் சாட்சியாக இன்றும் உள்ளன.  தற்போது புத்தரின் பெயரால் யாராவது வழக்கு தொடர்ந்து அந்த கோவில்களை இடித்து பழைய படி மடாலயம் கட்டவேண்டும் என்று புறப்பட் டால் நாடு என்னவாகும்? இதைப்பற்றி மத்தியஅரசோ உத்தரப்பிரதேச அரசோ கவலைப்படாது.மதச்சார்பற்ற சக்திகள் தான் கூடுதல் அக்கறையுடன் செயல்படவேண்டும். எனவே  மதுரா  வழக்கைவிசாரணை நிலையிலேயே நீதிமன்றம் நிராகரிப்பதற்கான அழுத்தத்தை ஏற்படுத்தவேண்டும்.

;