headlines

img

பி.எம். கேர்ஸ் நிதியும், பீகார் தேர்தல் பாசமும்

பி.எம். கேர்ஸ் நிதியிலிருந்து 500 படுக்கைகள் கொண்ட இரண்டு கொரோனா மருத்துவமனை கள் பீகார் மாநிலத்தில் அமைக்கப்படுகின்றன என்று செய்திகள் வெளிவந்துள்ளன. 

இந்தியாவின் மொத்த கொரோனா நோயாளி களின் 80 சதவீதம் பேர் பத்து மாநிலங்களில் உள்ள னர். இந்த மாநிலங்களில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தினால் ஒட்டு மொத்த நாட்டிலும் கொரோனாவை வெல்ல முடியும் என்று அண்மை யில் பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்த மாநிலங்களில் பீகாரும் ஒன்று. ஆனால் இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தின் இரண்டாவது இடத்தில் இருப்பது தமிழ்நாடு.  எனவே கொரோ னா பரிசோதனைகளை அதிகப்படுத்துவதற்காக பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து தமிழகத்திற்கு நிதி ஒதுக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனி சாமி கோரியிருந்தார். 

அதாவது கொரோனா உறுதிப்படுத்தும் பரிசோதனைகளுக்கு ஆகும் செலவில் 50 சதவீத தொகையை பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டும் என்பதே முதல்வரின் கோரிக்கையாகும். ஒரு நாளைக்கு கொரோனா பரிசோதனைக்கு ரூ.5 கோடி தேவைப்படுகிறது.  ஆனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் நட வடிக்கைகளுக்காக மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்ட நிதி ரூ.2 ஆயிரம் கோடி. ஆனால் மத்திய அரசு வழங்கியதோ ரூ.335 கோடி. இந் நிலையில் பீகார் மாநிலத்திற்கு மட்டும் பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து தாராளமாக நிதி ஒதுக்கி இரண்டு மருத்துவமனைகளை அமைக்கிறது.

ஏனெனில் ஓரிரு மாதங்களில் பீகாரில் சட்ட மன்றத் தேர்தல் வரவிருக்கிறது. அதனால் அந்த மாநிலத்திற்கு வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய 125 அவசர சிகிச்சை படுக்கைகள், 375 சாதாரண படுக்கைகள் கொண்ட 2 மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன. இந்த மருத்துவமனை களுக்கான மருத்துவர் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களை ஆயுதப்படையின் மருத்துவ சேவைக்குழு வழங்கும் என்று பிரதமர் அலுவல கம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் துவக்கம் முதலே மத்திய அரசு அலட்சிய மாகவும், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை பாரபட்சமாகவும், நடத்துகிற போக்கு தொடர் கிறது. ஆனால் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் பீகார் மாநிலத்திற்கு மிகவும் கரிசனத்தோடு பி.எம்.கேர்ஸ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எல்லாமே அவர்களுக்கு தேர்தல் பயன்பாடு கருதிய செயல்பாடாகவே தெரிகிறது.அதனால் தான் கொடிய  நோயினை கட்டுப்படுத்துவதில் கூட அவர்களது பாரபட்சமும் வெளிப்படுகிறது. 

பி.எம். கேர்ஸ் நிதி என்பதை பிரதமரின் பொது நிவாரண நிதியில் சேர்க்க உத்தரவிட முடியாது என்று  நீதிமன்றம் கூறியது அவர்களுக்கு மிகவும் வசதியாகிப் போய்விட்டது. அவர்களது இந்தப் போக்கு மாறவில்லை எனில் கொரோ னாவை கட்டுப்படுத்துவதில் உயிர்ச் சேதமும் அதிகமாகவே ஏற்படும். இதை பாஜக ஆட்சி உணருமா?

;