headlines

img

மக்களாட்சி மன்றத்தின் மாண்பு சிறக்கட்டும்!

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும் போது, பிரதமர் நரேந்திர மோடி உட்பட ஒன்றிய அமைச்சர்கள் பலரும் குறுக்கீடு செய்து விவா தத்தை திசை திருப்ப முயன்றுள்ளனர். 

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ராகுல் காந்தி உரையின் ஒரு பகுதியை அவை குறிப்பி லிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார். இதற்கு வன்மையான கண்டனம் எழுந்துள்ளது. அவை மரபுக்கு மாறான, கண்ணியக் குறைவான எதை யும் ராகுல்காந்தி அவையில் சொல்லிவிட வில்லை. ஆனால் பாஜக மற்றும்    ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பற்றியே யாரும் பேசக்கூடாது என்று சபாநாயகர் கருதுகிறார் போலும். 

இதே அவையில் கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் கடைசி நாளில் பிரதமர் நரேந் திர மோடி எந்தளவுக்கு ஆணவத்தின் உச்சத்தில் நின்று கொக்கரித்தார் என்பதை நாடாளுமன்ற மும், நாடும் பார்த்தது. 

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பரிவாரம் ஒட்டு மொத்த இந்துக்களின் பிரதிநிதியல்ல என்று ராகுல்காந்தி பொருத்தமாகவே குறிப்பிட்டிருக்கி றார். இது முற்றிலும் உண்மை. இன்னும் சொல்லப் போனால் சமூக நீதியை மறுப்பதன் மூலம், மனு நீதியை மறைமுகமாக வலியுறுத்துவதன் மூலம் பெரும் பகுதி இந்துக்களுக்கு எதிரான கட்சி யாக உள்ளது பாஜக. இந்து பெண்கள் உட்பட அனைத்து பெண்களுக்கும் எதிரான கட்சி பாஜக. இதைச் சொல்வதில் எந்த தவறும் இல்லை. 

குடியரசுத் தலைவர் உரை மீதான விவா தத்திற்கு பதிலளித்து கடைசியில் பேசும் வாய்ப்பு பிரதமர் மோடிக்குத்தான் இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் உரை உட்பட அவை யில் நடந்த விவாதத்திற்கு பதிலளிக்கும் வாய்ப்பு அவருக்கு உள்ளது. ஆனால் உண்மைகள் அடுத்தடுத்து வெளியாவதால் ஏற்பட்ட ஆத்தி ரத்தில் பிரதமர் துவங்கி ஒன்றிய அமைச்சர்கள் பலரும் குறுக்கிட்டு பேசவிடாமல் செய்வது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

இந்த முறை அறுதிப் பெரும்பான்மை இல் லாமல் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் தயவுடன் ஆட்சியமைத்தி ருக்கிறது பாஜக. நாடாளுமன்றத்தில் வலுவான எண்ணிக்கையில் எதிர்க்கட்சியும் இடம் பிடித்துள் ளது என்பதை ஆளும் தரப்பு மறந்துவிடக் கூடாது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விவா தத்தில் பங்கேற்ற சு.வெங்கடேசன் செங்கோல், மணிமுடி, சிம்மாசனம் இதையெல்லாம் தகர்த்து விட்டுத்தான் இந்திய ஜனநாயகம் இந்த அவை யிலே கால் ஊன்றியுள்ளது என்று பொருத்தமாக குறிப்பிட்டுள்ளார். மன்னராட்சி கால மனோநிலை யிலிருந்து மோடியும், ஒன்றிய அமைச்சர்களும் தங்களை மாற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. 

;