headlines

img

இது திட்டமல்ல அரசே, சட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக நூறு நாள் வேலை வாய்ப்பு சட்டத்தை மத்திய அரசு தொடர விரும்ப வில்லை என நாடாளுமன்றத்தில், மத்திய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் நரேந்தர் தோமர் கடந்த வாரம் அறிவித்தார். அமைச்சரின் இந்தக் கருத்து, ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழித்துக் கட்டுவதில் மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.  முன்னதாக முந்தைய காங்கிரஸ் அரசின் தோல்விகளை காட்டுவதற்காகவே மத்திய பாஜக அரசு இத்திட்டத்தை தற்போது வரை வைத்திருப்ப தாக  நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இது, பாஜக அரசின் உண்மையான குணத்தையும், எந்தவித வேலைவாய்ப்பும் இல்லா மல் தவிக்கும் கிராமப்புற ஏழை மக்களுக்காக அவர்கள் அறிவிக்கும் போலியான திட்டங்களை யும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

கடந்த பத்தாண்டுகளாக நிலவும் பொருளா தார மற்றும் வேளாண் நெருக்கடியின் பின்னணி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக நூறுநாள் வேலை வாய்ப்பு, எந்த வகைகளில் எல்லாம் பயன் படுகிறது என்பதை ஆய்வு செய்தால்,  பிரம்மாண்ட மான ஆய்வாக இருக்கும். கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து அதை நிலைநிறுத்து வதற்காக, தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டம் சேவையாற்றி வருகிறது. மேலும், அனைவருக் கும் வேலை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கி றது. குறிப்பாக, நலிவுற்ற பிரிவினருக்கென சிறப்பு முக்கியத்துவம் கொண்டிருக்கிறது. இச்சட்டத்தை வலுப்படுத்துவதற்காகவும் அதிக பலன்தரும் செயல் பாடுகளை நிலைநிறுத்துவதற்காகவும் அதிக முக்கி யத்துவம் அளிக்க வேண்டிய தருணம் இது.ஆனால் மோடி அரசு, பின்னோக்கிச் சிந்திக்கிறது.  மத்திய அரசின் நிதி ரூ.60 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் நிதியில், கடந்த 2018-19 பட்ஜெட்டில் ரூ.1084 கோடி குறைக்கப் பட்டுவிட்டது. இது மிக மோசமான ஒரு நிலை. கடந்த 2017-18-ம் ஆண்டில் வேலை வழங்கப்பட வேண்டிய சராசரி நாட்களை குறைத்து 45 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டது. வேலை நாட்க ளை மட்டும் குறைக்கவில்லை; 1.2 கோடி பேரில் 15 சதவீதத்தினரின் வேலை உரிமையும் மறுக்கப் பட்டிருக்கிறது. 2017-18-ம் ஆண்டில் 8.2 கோடி பேர் வேலை வழங்கக் கோரிக்கை வைத்திருந்த நிலை யில், 7.2 கோடி பேருக்கு மட்டுமே வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது. 

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக அமைச்சர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை  முற்றிலும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். ஏனென்றால், எந்நேரம் வேண்டுமானாலும் நிறுத்துவதற்கு இது திட்டம் அல்ல; வேலை செய்வதற்கான உரிமை கேட்டு மக்கள் நடத்திய நீண்ட போராட்டத்தின் அழுத்தம் காரணமாக, நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட சட்டம் ஆகும்.   கிராமப்புற ஏழை மக்களின் உரிமைகள் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தினால், அதை பொறுத்துக் கொள்ள முடியாது. அவர்களின் உரிமையை பாது காப்பதற்காக விவசாயத் தொழிலாளர் மற்றும் விவ சாயிகள் இயக்கங்கள் கொதித்து எழுவார்கள் என்பது திண்ணம்.

;