சென்னை:
தமிழகத்தில் உள்ள 526 பேரூராட்சிகளிலும் மகாத்மா காந்தி ஊரக வேலைஉறுதித் திட்டத்தைஅமலாக்க வேண்டும் என்றும், பேரூராட்சிகள் உட்பட அனைத்து ஊராட்சிகளிலும் இத்திட்டத்தின்கீழ் 200 நாட்கள் பணி வழங்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கொரோனா தொற்று ஏற்படுத்தியுள்ள பொருளாதார தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்யவும் அதனை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கவும் தமிழக அரசு அமைத்துள்ள ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையிலான குழுவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரிவான ஆலோசனைகளை அளித்துள்ளது. அதில் விவசாயிகள் மற்றும் கிராமப்புற வளர்ச்சி தொடர்பாக கூறியுள்ள அம்சங்கள் வருமாறு:
விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி:
கோவிட் 19 காலத்தில் அழிந்து போன நெல்,பழங்கள், காய் கறிகள், மலர் சாகுபடிகள், வெற்றிலை, மரவள்ளி கிழங்கு உள்ளிட்டவற்றுக்கான இழப்பீட்டை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும். போர்க்கால அடிப்படையில் விதை மற்றும் தேவையான உரங்கள் வழங்கப்பட வேண்டும். ஒருமுறை கடன் ரத்து என்ற விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை யை ஏற்க வேண்டும்.
மகளிர் சுய உதவிக்குழுக்கள், விவசாயத் தொழிலாளிகள், சுயதொழில் செய்வோர் போன்ற எளிய பகுதியினர் பெற்றுள்ள அனைத்து கடன்களுக்கான வசூலை ஓராண்டு காலம் தள்ளி வைக்கவும், இக்காலத்திற்கான வட்டியில் இருந்து விலக்கு அளிக்கவும் ரிசர்வ் வங்கியை கோர வேண்டும். கடன் தவணைகட்டுவதற்கு வற்புறுத்தக் கூடிய நிறுவனங் கள் மீது (நுண் நிதி நிறுவனங்கள் உட்பட) சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
சிறு-குறு நடுத்தர விவசாயிகளை மையமாககொண்ட வேளாண் கொள்கை உருவாக்கப்பட வேண்டும். இவர்களுக்கு மானியங்கள், கடன் வசதி, பயிர் காப்பீடு திட்டம், இயற்கை இடர்ப்பாடுகளிலிருந்து பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். கூட்டுறவு மற்றும் அரசுடமை வங்கிகளில் வேளாண் பணிகளுக்கு 4 சதவிகிதம் வட்டியில் கடன் வழங்கிட வேண்டும்.
தமிழகத்தில் சராசரியாக 45 சதமான நிலங்கள்பாசன வசதியின்றி உள்ள நிலையில், மழைநீரைத் தேக்குவது, மாநிலத்தில் உள்ள நதிகளை இணைத்து கடலில் கலக்கும் நீரை பாசனத்திற்கு திருப்பிவிடுவது, ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள் ஆகியவற்றை தூர்வாரி முழுமையாக பராமரிப்பு செய்வது போன்றவற்றை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இது பாசனப் பகுதியை விரிவுப்படுத்திட, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திட, நிலத்தடி நீரை மாசுபடாமல் தடுத்திட, கிராமப்புற வேலை வாய்ப்புகளை பெருக்கிட பயன்படும்.
விவசாயத்தையும், உணவுப் பாதுகாப்பையும் அழிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்கள் மக்கள் போராட்டங்களினால் ரத்து செய்யப்பட்டாலும், 8 வழிச்சாலைகள், ஐ.டி.பி.எல். பெட்ரோலிய குழாய் பதிக்கும்திட்டம், உயர்மின் கோபுரங்கள் அமைக்கும்பணி போன்றவை தொடர்ந்து செயல்படுத்தப் படுகின்றன. ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உணவு பாதுகாப்புக்கும் இடையிலுள்ள சமன்பாடு பாதுகாக்கப்படுவதோடு, கார்ப்பரேட்டுகளின் லாபத்தை நோக்கமாக வைத்து விவசாயத்தை அழிக்கும் அனைத்து திட்டங்களையும் கைவிட வேண்டும்.
விவசாய விளை பொருட்களுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் நியாய விலை தீர்மானிக்க வேண்டும். நெல் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை அரசே முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும்.
காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களைப் பதப்படுத்தி பாதுகாக்கபஞ்சாயத்து யூனியன் மட்டங்களில் குளிர் பதன நிலையங்கள் அமைத்திட வேண்டும்.
கிராமப்புறங்களில் நில உச்சவரம்பு சட்டத்தை அமல்படுத்தி, நிலமற்ற ஏழைகளுக்கு நில விநியோகம் செய்திட வேண்டும். பஞ்சமிநிலங்களை மீட்டு தலித் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். அனைத்து சமய நிறுவனங்கள், வக்பு வாரியம், அறக்கட்டளைகள், மடங்களுக்கு சொந்தமான நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நிலங்களை சொந்தமாக்க வேண்டும். நில விநியோ கத்தின் மூலம் மட்டுமே கிராமப்புற மக்க ளின் வாங்கும் சக்தியை அதிகரிக்கமுடியும்.
கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தை 200 நாட்களாக உயர்த்துவ தோடு, நாளொன்றுக்கு ரூ. 600/-சம்பளம்தீர்மானிப்பது, கோருகிற அனைவருக்கும் வேலை அட்டையும், வேலையும் வழங்குவது, சட்டக் கூலியை முழுமையாக அளிப்பது போன்றவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 526 பேரூராட்சிகளில் பெரும்பகுதி கிராமப்புற பேரூராட்சிகளாகும். இவற்றை ஊராட்சிகளாக மாற்றிடுவது அல்லது இந்த பேரூராட்சிகளுக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தை விரிவுபடுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட் களாகவும், நுகர்வு பொருட்களாகவும் மாற்றிட வேளாண் சார் சிறு தொழிற் சாலைகளை கிராமங்களில் அமைத்திட வேண்டும். இதற்கு ஏதுவாக அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பத்தை கிராமப்புற விவசாயிகள் மற்றும் இளைஞர்கள்/ இளம் பெண்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். இதன் மூலம் பதப்படுத்தப்பட்ட இத்தகைய பொருட்களை விவசாயிகள் சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
வேளாண் விரிவாக்கப்பணி அமைப்பு வலுப்படுத்தப்பட்டு, காலிப்பணியிடங்கள் உடனடியாக முறைப்படி நிரப்பப்படவேண்டும். வேளாண் ஆராய்ச்சிப்பணி களுக்கும் இது பொருந்தும்.u விவசாயத்திற்கு தினசரி 14 மணி நேர மும்முனை மின்சாரம், விண்ணப்பித்த அனைவருக்கும் மின் இணைப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதோடு ஏற்கனவே நடைமுறையில் உள்ள இலவச மின்சார திட்டத்தையும் பாதுகாக்க வேண்டும்.
கிராமப்புற மக்கள் கல்வி, சுகாதாரம், மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் நகர்ப்புறங்களை நோக்கிச் செல்லும் நிலைமை உள்ளது. இதனை தவிர்த்திட நகர்ப்புறங்களில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் கிராமப்புறங் களில் கிடைப்பதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும். கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, தொலைபேசி, வலைதள கட்ட மைப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்ட கிராமப்புற கட்டமைப்புகளை அமைத்திட வேண்டும்.
மீன்பிடி தொழிலாளர்கள்
uநீண்ட கடலோரப் பகுதிகளை கொண்டி ருக்கும் தமிழகத்தில் கடந்த நான்கு மாத காலமாக மீன்பிடித் தொழில் பாதிக்கப் பட்டுள்ளது. பிடித்து வரும் மீன்களை வெளி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லவும், வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கும் இயலாத நிலைஉள்ளது. மேலும் உள்நாட்டு மீனவர்கள், மீன்விற்பனை செய்யும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிவாரணங் களை தொடர்ந்து வழங்கிட வேண்டும்.