headlines

img

இரட்டைத் தலைமை இரட்டை நாக்கு

“ஜெய் ஸ்ரீ ராம்” என்று கூறுமாறு வதை செய்து இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்துத்து வா கும்பலால் வதை செய்யப்பட்டு கொல்லப்படு வது அன்றாட நிகழ்வாகி உள்ளது. உ.பி. மாநி லத்தில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூற வேண்டுமென மிரட்டப்பட்டு தீ வைக்கப்பட்ட சிறுவன் முகமது காலித் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.அவரது உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல ஆம்பு லன்ஸ் தருவதற்கு கூட மருத்துவமனை நிர்வாகம் மறுத்திருக்கிறது. ஆனால் இஸ்லாமிய சமூக பெண்களை பாதுகாப்பதற்காகவே முத்தலாக் தடை மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றியி ருப்பதாக பாஜகவினர் பசப்புகின்றனர். இவர்க ளுக்கு முஸ்லிம்கள் மீதும் பாசம் இல்லை, இந்திய பெண்கள் முன்னேற்றம் மீதும் அக்கறையில்லை. அப்படியிருந்தால் அனைத்துப் பகுதி பெண்க ளும் அரசியல் அதிகாரம் பெற வகை செய்யும் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நாடாளு மன்றத்தில் நிறைவேற்ற மறுப்பது ஏன்? 

எந்த மதத்தின் பெயரால் நடைமுறைப் படுத்தப்பட்டாலும் பெண்களுக்கெதிரான அநீதிகள் களையப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகளின் நியாயமான விமர்சனத்தைக் கூட கருத்தில் கொள்ளாமல் பிடிவாதமாக முத்தலாக் தடை மசோதாவை மோடி அரசு நிறை வேற்றியிருப்பது நல்ல நோக்கத்தில் அல்ல. சிறுபான்மை மக்களை அச்சுறுத்தி பணிய வைக்க வேண்டுமென்ற அவர்களது திட்டத்தின் ஒரு பகுதியே இது.  மறுபுறத்தில் பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அடுத்தடுத்து கொண்டு வரும் பல்வேறு மக்கள் விரோத மசோதாக்களை அதிமுக எந்த விதமான ஆட்சேபணையுமின்றி இரு கரம் தூக்கி ஆதரித்து வருகிறது. அதிமுக கடந்த காலத்தில் எடுத்த நிலைபாடு குறித்து இப்போது இருக்கும் இரட்டைத் தலைமைக்கு எந்த பார்வையும் இல்லை.  பாஜகவிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும், அவர்களது தயவுடன் மாநில ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும், கொள்ளையை தடையின்றி தொடர வேண்டும் என்பது மட்டுமே அவர்களது குறிக்கோளாக உள்ளது. 

மக்களவையில் அதிமுகவின் ஒற்றை உறுப்பி னர் முத்தலாக் தடை மசோதாவை ஆதரித்த நிலையில் மாநிலங்களவையில் அதிமுக உறுப்பி னர் எதிர்த்துப் பேசியுள்ளார். மசோதா வாக்கெடுப்பு க்கு வந்தபோது அதிமுக உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்துள்ளனர். இது அவர்களது இரட்டை தன்மையையே வெளிப்படுத்துகிறது. பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் கூட இந்த மசோதாவை எதிர்த்து வாக்க ளித்துள்ளது.  தகவல் அறியும் உரிமைச் சட்ட திருத்த மசோதா, தேசிய புலனாய்வு முகமை மசோதா  உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களில் பாஜக வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய அதிமுக முத்தலாக் தடை மசோதா விசயத்தில் தங்களை சற்று வேறுபடுத்தி காட்டிக் கொள்ள முயல்வது  அப்பட்டமான ஏமாற்று வேலையே யாகும்.

;