headlines

img

நாடாளுமன்றத்தை இழிவுபடுத்துவதா?

 வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட விதம் ஜனநாயகத்தை மோடி அரசு எந்தளவுக்கு கேலிக்கூத்தாக்குகிறது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. மூன்று மசோதாக்கள் மீதும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றுஎதிர்க்கட்சிகள் கூறியதை சற்றும் பொருட்படுத்தாமல் குரல் வாக்கெடுப்பு மூலம்மசோதாக்கள் நிறைவேறிவிட்டதாக அறிவித்திருப்பதன் மூலம் ஜனநாயகத்தின் குரல் நெரிக்கப்பட்டுள்ளது.

அவையில் ஒரு உறுப்பினர் வாக்கெடுப்பு கோரினால் கூட வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்என்பது விதி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஉறுப்பினர் கே.கே.ராகேஷ் உட்பட பல உறுப்பினர்கள் இம் மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரிய போதும்அதை கவனத்தில் கொள்ளாமல் கூச்சல்குழப்பத்தை பயன்படுத்தி மசோதா நிறைவேறிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மாநிலங்களவை துணைத் தலைவருக்கு எதிராக 12 எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கான நோட்டீஸ் அளித்துள்ளன.  அவை நடவடிக்கைகளையும் மசோதா நிறைவேற்றத்தையும் ஒத்தி வைக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரியதும் ஏற்கப்படவில்லை. மாநிலங்களவையில் இந்த மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் அரசுக்குஇல்லை என்பது தெளிவாக தெரிந்திருந்த நிலையில், வாக்கெடுப்பு நடத்தினால் மசோதாக்கள்தோற்கடிக்கப்படும் என்ற அரசின் அச்சத்திற்குஏற்ப, மாநிலங்களவைத் தலைவர் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளார். இது அரசமைப்புசட்டத்தால் உறுதிப்படுத்தப்பட்ட உறுப்பினர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயலாகும்.

ஒரு அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்திவிட்டு, நியாயத்திற்காக குரல்கொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஉள்ளிட்ட 8 எதிர்க்கட்சி உறுப்பினர்களைசஸ்பெண்ட் செய்துள்ளனர். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக மோடி அரசு கொண்டுவந்துள்ள மூன்று மசோதாக்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த உணர்வைத்தான் அவையில் எதிர்க்கட்சிகள் பிரதிபலித்தன.

ஆனால் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அவையில் ஒரு கொடூர நாடகம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மோடி அரசு நடந்து கொள்வதுஇது முதன்முறையல்ல. பல்வேறு சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றத்தை   புறக்கணித்துவிட்டு, பல்வேறு எதேச்சதிகார முடிவுகள், அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மசோதாக்கள் மீது நடந்த  விவாதத்திற்கு பதிலளிக்கக் கூட பிரதமர்மோடி தயாராக இல்லை. மாறாக கொடூரமான சட்டங்களை ஆதரித்து அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார். அரசியல் சாசனத்தின்படிஅமைக்கப்பட்ட அனைத்து அமைப்புகளும் தகர்க்கப்படுவது ஜனநாயகத்திற்கு பேராபத்தாகும்.

;