headlines

img

உச்சநீதிமன்றத்தின் பிடியில் சிக்கிய ஆளுநர்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனை விடு வித்து உச்சநீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்க வேண்டுமென்ற தமிழக அரசின் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆத ரித்தன. நீண்ட நெடிய சட்டப் போருக்கு பிறகு பேரறிவாளன் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள வர்களை விடுவிக்க வேண்டுமென தொடர்ந்து போராடி வந்தவர்களுக்கு இந்த தீர்ப்பு ஆறுதல் அளிக்கக்கூடிய ஒன்று.

மறுபுறத்தில் ஒன்றிய அரசின் கையாட்க ளாக ஆளுநர் என்ற பொறுப்பில் அமர்ந்து கொண்டு அட்டூழியம் செய்யும் அணுகுமுறைக்கு உச்சந்தலையில் ஓங்கி குட்டு வைப்பதாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக் கப்பட்டு சிறையிலிருந்த ஏழு பேரை விடுவிக்கப் போவதாக 2012 ஆம் ஆண்டு தமிழக அரசு முடிவு செய்து ஒன்றிய அரசின் கருத்தை கோரியது. ஆனால் மத்திய புலனாய்வுத்துறை விசாரித்த வழக்கு என்பதால் இவர்களது விடுதலை குறித்து தமிழக அரசு முடிவு செய்ய முடியாது என ஒன்றிய அரசு பதிலளித்தது.

இந்த நிலையில் பேரறிவாளன் தம்மை விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். தமிழக அமைச்சரவையின் தீர்மா னத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் இழுத்தடிப்பதோடு சம்பந்தமேயில்லாமல் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைத்தார்.

இதை உச்சநீதிமன்றம் வன்மையாகக் கண்டித் துள்ளது. மேலும் விடுவிக்கக்கூடிய அதிகாரம் மாநில அரசுக்கா? அல்லது ஒன்றிய அரசுக்கா? என்று விவாதம் நடத்தி பேரறிவாளன் உள்ளிட்ட வர்களின் விடுதலையை தாமதப்படுத்திய நிலை யில் உச்சநீதிமன்றம் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகள் சட்டம்-ஒழுங்கு சார்ந்தவை. ஆதலால் இதில் மாநில அரசுக்கு தான் முக்கியத்துவம் என தெளிவுபடுத்தின. 

அதேநேரத்தில் அரசமைப்புச் சட்டம் 142ஆவது பிரிவின்படி தமக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது. திமுக அரசு பொறுப் பேற்ற பிறகு தமிழக அரசின் சார்பில் முன்வைக் கப்பட்ட வாதங்கள் பேரறிவாளன் விடு தலையை சாத்தியமாக்கியது மட்டுமின்றி, ஆளு நரின் அலட்சியத்தையும் தாமதத்தையும் அம்பலப் படுத்துவதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 

 நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் ஆளுநரும் ஒன்றிய அரசும் திட்டமிட்டு நாடகம் ஆடும் நிலையில் இந்த தீர்ப்பு பல சட்ட விவாதங்க ளுக்கும் விளக்கங்களுக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.

;