headlines

img

முட்டாள்தனம்

பிப்ரவரி 14ஆம் தேதி சர்வதேச காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் ஆர்எஸ்எஸ் பரிவாரம் காதலர் தினத்தை கொண்டாட தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரு கிறது. காதலர் தினத்தன்று சந்திக்கும் காதலர்க ளை தாக்குவது, ஓட ஓட விரட்டுவது, காவல் துறையிடம் ஒப்படைப்பது போன்ற கண்ணியமற்ற செயல்களில் இந்த பரிவாரம் ஈடுபடுவது வழக்கம். இவர்களது இழி நோக்கத்திற்கு காவல் துறையினரில் சிலரும் கூட துணை போகும் கொடுமை நடந்துள்ளது.

காதலர் தினத்தை கொண்டாட காதலர்கள் தயாராவதை விட கூடுதலான வேகத்தில் மத அடிப்படைவாதிகள் தயாராவது வழக்கம். இந்தாண்டு இவர்களோடு போட்டி போட்டு ஒன்றிய அரசும் களத்தில் இறங்கியுள்ளது.

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் செயல் பட்டு வரும் விலங்குகள் நலவாரியம் ஒரு அறி விப்பை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 14ஆம் தேதி ‘பசுவை அரவணைக்கும் தினமாக’ (Cow hug day) கடைப்பிடிக்குமாறு இந்த வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஒன்றிய மீன்வளம், கால்நடை மற்றும் பால் வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் விலங்குகள் நலவாரியம் “மனிதர்களுக்கு எல்லா செல்வங்களை அளிப்பதோடு, தாயைப் போல ஊட்டமளிக்கும் பணியை கோமாதா எனும் பசு மேற்கொண்டு வருகிறது. மேற்கத்திய கலாச்சார தாக்கத்தால் வேத மரபுகள் சில அழிவின் விளிம்பில் உள்ளன. பசுவை கட்டிப் பிடித்தால் உணர்ச்சிப் பெருக்கு ஏற்படும். அதோடு  நமக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்” என்றெல்லாம் உளறியிருப்பதோடு, கடைசியில் நேர்மறையான ஆற்றல் பெற பிப்ரவரி 14ஆம் தேதி பசுவை கட்டிப் பிடிக்கும் தினமாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

விலங்குகள் நலவாரியத்தின் பணி என்பது விலங்குகள் மற்றும் மீன் வளத்தை பாதுகாப்ப தாக இருக்க வேண்டுமேயன்றி இத்தகைய முட்டாள்தனமாக, அறிவியலுக்கும் பகுத்தறி வுக்கும் கொஞ்சம் கூட பொருந்தாத கருத்துக் களை முன்வைப்பதாக இருக்கக்கூடாது.

பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் வெளி நாடுகளுக்கு மாட்டுத்தோலை ஏற்றுமதி செய்வ தில் முதலிடத்தில் உள்ளனர். மறுபுறத்தில் பசு இறைச்சியை தின்பதாகக் கூறி உழைக்கும் மக்களையும், சிறுபான்மை மக்களையும் தாக்கி படுகொலை செய்யும் நிகழ்வுகள் நடந்து வரு கின்றன. 

அறிவியல் கருத்துக்களை பரப்ப வேண்டிய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு துறையே இத்தகைய அறிவற்ற செயல்களில் ஈடுபடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது மதச்சார்பற்ற, அரசியல் சாசனத்திற்கு முற்றிலும் நேர் எதிரானது. காதலர் தினத்தை கொச்சைப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு ஒட்டு மொத்த தேசத்தையும் இவர்கள் இழிவுபடுத்திக் கொண்டி ருக்கிறார்கள். இந்த அறிவிப்பு உடனடியாக திரும்பப் பெறப்படுவதோடு இதற்கு காரணமான அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

;