headlines

img

பட்ஜெட் இல்லாத பட்ஜெட்

 பொருளாதார மந்தத்தின் விளிம்பை தட்டி நிற்கிற இந்திய தேசத்திற்கு எப்படிப்பட்ட திசைவழியை காட்டுவது என்று எதுவுமே தெரி யாமல் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக பட்ஜெட் உரையை படித்து, முடிக்க முடி யாமல் அதையும் விளிம்பிலேயே விட்டு விட்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பட்ஜெட்டே இல்லாமல் ஒரு பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் அவர் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி. அரசியல் நையாண்டி யுடன் கூடிய விமர்சனத்தை முன்வைத்திருக் கிறார். பட்ஜெட்டின் முதல் திருகுதாளமே, வருவாய்  தொடர்பான விவரங்களில் திருத்தப்பட்ட மதிப்பீடுகளை சமர்ப்பித்திருப்பதுதான். மிகப் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளிடமிருந்து எவ்வளவு வரி வசூலிக்கப்பட்டது என்பதை நாட்டு மக்களிடம் பட்டியல் போடுவதற்குப் பதிலாக மத்திய ரிசர்வ் வங்கியிலிருந்து மடைமாற்றம் செய்யப்பட்ட ரூ.1.76 கோடியை வருவாய் இனத்தில் கொண்டுவந்து நாட்டு மக்களை ஏமாற்றியிருக்கிறார் நிதி அமைச்சர்.  அது மட்டுமல்ல, பல்வேறு பொய்யுரை கள் அதில் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக  271 மில்லியன் மக்களை வறுமைக்கோட்டி லிருந்து மேலே கொண்டுவந்துவிட்டதாக முற்றிலும் குரூரமான ஒரு பொய்யை அவர்  வெளியிட்டிருக்கிறார். ஆனால் உண்மையில் இந்த காலக்கட்டத்தில் கிராமப்புற செல வினம் 8சதவீதத்திற்கும் கீழாக வீழ்ச்சியடைந்து விட்டது; பொருட்களை வாங்கும் அளவிற்கு மக்களின் கைகளில் பணப்புழக்கம் இல்லை; மிகக்கொடிய வறுமையில் தேசத்தின் பெரு வாரியான மக்கள் சிக்கியிருக்கிறார்கள் என் பதை உணர்த்துவதாக ஏராளமான ஆய்வுகள் வெளிவந்துவிட்ட பிறகும்கூட இப்படிப்பட்ட பொய்யை ஆட்சியாளர்களால் துணிந்து கூற முடிகிறது. ஆனால் மறுபுறத்தில், ஒட்டுமொத்த வளங்களும் செல்வங்களும் பெரும் கார்ப்ப ரேட்டுகளுக்கு மடைமாற்றம் செய்யப்படுகிறது என்ற உண்மையை பட்ஜெட் மறைக்கிறது. குறிப் பாக 1லட்சத்து 37ஆயிரம் ஏக்கர் அளவிற்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங் கள் நிரம்பிய நிலங்கள், அந்த வளங்களை எடுத்து விற்பனை செய்வதற்காக தனியார் பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல ஏழை-எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் அறிவிப்புகளை துணிகர மாக வெளியிட்டிருக்கிறது. சர்வதேச பட்டினி தொடர்பான புள்ளிவிபர வரிசையில் இந்தியா மிக மிக மோசமான நிலையில், இருக்கிறது; ஆனாலும் பொது விநியோக முறையில் உணவுதானியங்களை நாடு முழுவதும் விநியோகிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள இந்திய உணவுக்கழகத்திற்கு செய்யப்பட வேண்டிய ஒதுக்கீட்டை மிகக்கடுமையாக வெட்டியிருக்கிறது. மொத்தத்தில் செல்வங்கள் அனைத்தும் பெரும் கோடீஸ்வரர்களுக்கு; துயரங்கள் அனைத்தும் பாட்டாளி மக்களுக்கு.  இந்தக் கொடுமையை எதிர்த்து வீதிகளில் அணிதிரள்வீர்!

;