காஷ்மீரிகளின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் பாஜக
ஜம்மு- காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசு இருந்தபோதிலும் துணை நிலை ஆளுநர் தான் அந்த மாநிலத்தை ஆட்சி செய்து வருகிறார். அரசியல் சாசனத்தின் 370ஆவது பிரிவு நீக்கப்பட்ட பின்னர் மாநில அரசுக்கான அந்தஸ்து குறைக்கப்பட்டு ஜம்மு- காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. ஒன்றிய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலந்தாலோ சிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வரு கிறார்.
1931 ஆம் ஆண்டு ஸ்ரீநகரில் மகாராஜா ஹரி சிங்கின் ஆட்சிக்கு எதிராகப் போராடியபோது டோக்ரா ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட 22 காஷ்மீரிகளின் தியாகத்தை ஆண்டுதோறும் ஜூலை 13 ஆம் தேதி காஷ்மீரில் பாஜகவை தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் நினைவு கூர்வது வழக்கம்.
ஸ்ரீநகரில் உள்ள தியாகிகள் கல்லறையில் ஒவ்வொரு அரசியல் கட்சிகள் சார்பில் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்படும். மேலும் அன்றைய தினம் பொது விடுமுறை விடப்படும். ஆனால் 370ஆவது பிரிவு நீக்கப்பட்ட பின்னர் அந்த விடு முறையை ஆளுநரின் நிர்வாகம் ரத்து செய்து விட்டது. அம்மாநிலத்தின் ஆளுங்கட்சியான தேசிய மாநாட்டு கட்சி, பிரதான எதிர்க்கட்சி யான மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி), மக்கள் மாநாடு (பிசி) உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தபோதும் அதை துணை நிலை ஆளுநர் ஏற்கவில்லை.
ஆளுநரின் தடையை மீறி ஞாயிறன்று ஸ்ரீநகரில் உள்ள தியாகிகள் கல்லறையில் “மூத்த நிர்வாகிகளுடன்” அஞ்சலி செலுத்தப்போவதாக தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். ஆனால் இந்த நிகழ்ச்சியை தடுப்பதில் ஆளுநர் குறியாக உள் ளார். காரணம் இந்து மதத்தை சேர்ந்த ராஜாஹரி சிங்கின் அராஜகத்தை எதிர்த்த நிகழ்வு என்பதால் அதை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
ஜம்மு-காஷ்மீர் தியாகிகள் தினத்தை சீர் குலைக்கும் வகையில் மிதவாத ஹுரியத் தலை வர் மிர்வாய்ஸ் உமர் ஃபாரூக் ஸ்ரீநகரின் ஜாமியா மசூதியில் வெள்ளிக்கிழமை வாராந்திர பிரசங்கம் செய்வதையும் தடுத்து வீட்டுக் காவலில் வைக் கப்பட்டுள்ளார். துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா யூனியன்பிரதேச அரசுக்கு உள்ள அதி காரத்தை கட்டுப்படுத்துகிறார். மேலும் காவல் துறையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கி றார். அம்மாநில பாஜக, தியாகிகள் நினைவு தினத் திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவரான பாஜகவின் சுனில் சர்மா, 1931 ஆம் ஆண்டு டோக்ரா ராணு வத்தால் கொல்லப்பட்டவர்களை “துரோகிகள்” என்று கூறி மக்களின் கோபத்தை தூண்டிவிட்டுள் ளார். மதநல்லிணக்கத்தை சீர்குலைப்பதையே தனது நிகழ்ச்சி நிரலாக கொண்டிருக்கிறது பாஜக. அதற்கு துணைநிலை ஆளுநரும் வெட்கமே இல்லாமல் துணை போகிறார்.