headlines

img

குடியரசை கொண்டாடுவோம்!

இந்தியத் திருநாட்டின் 73 ஆவது குடியரசு தினம் இன்று உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடுகளில் ஒன்றான இந்தியா தனக்கான, தனித்துவமான அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொண்ட நாள் இது. 

இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களாக ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி உள்ளிட்ட மாண்புகள் விளங்கு கின்றன. இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக சோசலிச குடியரசாக வரையறுத்ததன் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையை அரசியல் சட்டம் அழுத்தமாக அங்கீகரித்துள்ளது. 

அரசியல் சட்டத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கான அதிகார எல்லைகளும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான முக்கியத்துவ மும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தி யாவின் சுதந்திர தின பவள விழா கொண்டா டப்படும் இந்தத் தருணத்தில் அரசியல் சட்டம் உயர்த்திப் பிடிக்கும் பல்வேறு  விழுமியங்கள் ஒன்றிய அரசினால் அரிக்கப்பட்டு வந்துள்ளதை காண முடியும்.

குறிப்பாக மாநிலங்களின் அதிகாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்பட்டு ஒன்றிய அளவில் அதிகாரக்குவிப்பு நடந்து வருகிறது. குறிப்பாக பாஜக கூட்டணி அரசின் கடந்த ஏழு ஆண்டுகளில் அதிகாரங்கள் அனைத்தும் குவிக் கப்பட்ட ஒன்றிய அரசு பலவீனமான மாநில அரசு கள் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் கருத் தோட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மாநிலப் பட்டியலில் இருந்த கல்வித்துறை அவசர நிலைக் காலத்தில் ஒத்திசைவுப் பட்டிய லுக்கு மாற்றப்பட்டது. ஆனால் நடைமுறையில் கல்வித்துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக சென்று கொண்டிருக்கி றது. இதற்காகவே புதிய தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தி மற்றும் ஆங்கில மொழிகளை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக ஏற்றுக்கொண்ட அரசியல் சட்டம் இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட எந்த மொழியையும் தேசிய மொழி என அங்கீ கரிக்கவில்லை.  ஆனால் அப்படியொரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இந்தி மற்றும் சமஸ் கிருத திணிப்பு முனைப்பாக மேற்கொள்ளப் படுகிறது. அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்ட வணையில் இடம் பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளை ஒன்றிய அளவில் ஆட்சி மொழி யாக்குவது மொழி சமத்துவத்தையும், மொழி சார்ந்த பன்முகப் பண்பாட்டையும் முன்னெடுக்க உதவும்.

இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் அனைத்து நிலைகளிலும் சமமானவர்கள் என அறுதியிட்டு வரையறுத்துள்ளது அரசியல் சட்டம். ஆனால் தீண்டாமை உள்ளிட்ட சாதியக் கொடுமைகள் இன்னமும் கூட தொடர்கிறது. பாலியல் சமத்து வம் ஏற்படவில்லை என்பது மட்டுமல்ல, பாலின பாகுபாடு மேலிருந்து கீழ் வரை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான குறைந்த பட்ச இடஒதுக்கீடு கூட மறுக்கப்படுகிறது. இது நேர் செய்யப்பட வேண்டும். 

இந்திய அரசியல் சட்டத்தில் ஊடும்பாவுமாக வுள்ள மதச்சார்பின்மை, கூட்டாட்சி உள்ளிட்ட கோட்பாடுகளை காத்து நிற்க இந்நாளில் உறுதியேற்போம்.

 

;