headlines

img

நிதானம் காத்தால் இஸ்ரேலுக்கு நல்லது

ஈரானுக்கு பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேல் கொக்கரிக்கிறது. பதிலடி கொடுத்தால் அதன் விளைவு இன்னும் கடுமையாக இருக்கும் என்று இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்தி ருக்கிறது. இந்த புதிய கடும் மோதலின் காரணமாக ஒட்டுமொத்த மத்திய கிழக்குப் பிரதேசமும் உலக மும் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளன.

போரை நிறுத்துங்கள் என்று ஐநா சபையும் அமைதியை நிலை நாட்டுங்கள் என்று உலக நாடுகளும் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதற்கு நேர் எதிராக அமெரிக்க ஜனாதிபதி பைடன், ஈரானை திருப்பித் தாக்குங்கள் என்று இஸ்ரேலுக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறார். இதன் மூலம், இந்தப் போர் இத்துடன் நிற்கக் கூடாது; ஒட்டுமொத்த மத்திய கிழக்கு ஆசியா முழுவதும் நீண்டகாலத்திற்கு பற்றி எரிகிற ஒரு போராக மாற வேண்டும் என்ற அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் சூழ்ச்சி நிறைவேற வேண்டும் என்ற  அமெரிக்க நிர்வாகத்தின் விருப்பமே வெளிப் பட்டுள்ளது.

மத்திய கிழக்கு ஆசியாவில் இஸ்ரேலும் அதன் இராணுவ நடவடிக்கைகளும் வேட்டையாடும் ஒரு ஏவல் நாயின் செயலைப் போன்றது தான். ஏனென்றால் இஸ்ரேலின் தாக்குதல் என்பது முழுக்க முழுக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தாக்குதலே ஆகும். 

ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியமும் உலகிலேயே மிக அதிக எண்ணெய் வளம் கொண்ட பூமி. நிரந்தரமாக அந்த பூமி பற்றி எரிந்து கொண்டி ருப்பதும் பதற்றத்தில் ஆழ்ந்து இருப்பதுமே ஒட்டு மொத்த எண்ணெய் வளத்தையும் சூறையாடுவ தற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பெரும் உதவியாக இருக்கும். அத்தகைய பதற்றத்தைத் நீடித்து நிலைக்க செய்வதே இஸ்ரேலுக்கு கொடுக் கப்பட்டுள்ள பணி. அந்த பணியை இஸ்ரேல் மிகத் தீவிரமாக மேற்கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், தொடர்ந்து மிகக் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் பாலஸ் தீனம் மற்றும் லெபனான் மக்களை பாதுகாப்பத ற்கு நாங்கள் இருக்கிறோம் என்ற ஒரு எச்சரிக்கை சமிக்ஞை தருவதுதான் ஈரானின் பதிலடி தாக்குத லாகும். இந்தத் தாக்குதல் இஸ்ரேலில் எந்த உயிர் சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் இஸ் ரேல் பாலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கான மக் களை -குழந்தைகள், பெண்கள் என்று கூட பாராமல் கொடூரமாக கொன்று குவித்தது. லெப னானில் மிகப்பெரும் அட்டூழியத்தை அரங்கேற்றி உள்ளது. ஈரானுக்கு உள்ளேயே புகுந்து படுகொலை களை அரங்கேற்றியது. அத்தகைய சம்பவங்க ளுக்கு அந்த தருணத்திலேயே ஈரான் பழிவாங்கலில் ஈடுபடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. 

இதை உணர்ந்து இஸ்ரேல் தனது மக்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால், தற்போது நிதானமாக நின்று பேச வேண்டும். உலகின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டும். 

ஆனால் இஸ்ரேலை ஆளும் யூத இனவெறி - அமெரிக்க ஏகாதிபத்திய அடிமை அரசு அதைச் செய்யுமா என்பது கேள்விக்குறியே. இஸ்ரேலின் நகர்வைப் பொறுத்தே மத்திய கிழக்கின் அமைதியும் உலகம் அமைதியும் இருக்கிறது.