headlines

img

மோடி அரசின் உடனடி கடமை

ஈரான்- இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றச் சூழலால் உலகளாவிய வர்த்தகம் மற்றும் எண்ணெய் ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட நடவடிக்கைகள் கடும் பாதிப்பை சந்திக்கும் அபாயம் எழுந்துள்ளது. இதனால் கடு மையாக பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். 

குறிப்பாக இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்து வருகிறது. ஈரான், சவூதி அரேபியா  உள்ளிட்ட நாடுகளில் இருந்தே அதிகப்படியான எண்ணெய் இந்தியாவுக்கு வருகிறது. இதில் 60 சதவீதம் கச்சா எண்ணெய், ஹோர்முஷ் நீரிணை வழியாகத்தான் இந்தியாவுக்கு வந்து சேர்கிறது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மோதல் தீவிரமடைந்தால் ஹோர்முஷ் நீரிணை வழி யாக நடக்கும் அனைத்து போக்குவரத்தும் முற்றாக ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்படும். அதன் விளைவாக இந்தியாவுக்கு வந்து சேர வேண்டிய கச்சா எண்ணெய் கணிசமாக நின்று போகும் அபாயமும் உள்ளது.

அதுமட்டுமல்ல, உலக பெட்ரோலிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முதன்மையான நாடுகளில் ஒன்று ஈரான். நாளொன்றுக்கு 30 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கிறது ஈரான். உலக எண்ணெய் உற்பத்தி  மற்றும் ஏற்றுமதியில் 5 இல் ஒரு பங்கு ஈரான் வசமே உள்ளது. இந்நிலை யில், ஈரான் - இஸ்ரேல் மோதல் காரணமாக கச்சா  எண்ணெய் விலை கடந்த மூன்று நாட்களில் பேரல் ஒன்றுக்கு 72 டாலரிலிருந்து 80 டாலராக திடீரென கூர்மையாக அதிகரித்துள்ளது. 

ஏற்கெனவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்த போதி லும் அதன் பலன் எதுவும் இந்தியாவில் மக்க ளுக்கு கிடைக்க விடாமல் பல்வேறு வகையான வரிகளை விதித்தும், அதிகரித்தும் தொடர்ந்து பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி வந்தது மோடி அரசு. இந்நிலையில் புதிய போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், அதன் மொத்த பாதிப்பையும் இந்தியாவில் மக்கள் தலையிலேயே ஏற்றிட மோடி அரசு தயங்காது. 

எண்ணெய் வர்த்தகம் மட்டுமல்ல, பல்வேறு வகையான உணவு தானிய ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட இந்தியாவின் சர்வதேச வர்த்தக போக் குவரத்தில் மேற்கண்ட ஹோர்முஷ் நீரிணைப் பாதைக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த வழியா கவே ஐரோப்பிய நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகம் நடக்கிறது. எனவே நிலைமை மோசம டைந்தால் இந்தியாவின் பல்வேறு வகையான வர்த் தக போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்படும்.

எனவே மோடி அரசுக்கு இரண்டு முக்கிய பணிகள் உள்ளன. ஒன்று, ஈரான் - இஸ்ரேல் மோ தலை தவிர்ப்பதற்காக உலக நாடுகளோடு இணை ந்து வலுவாக குரல் கொடுக்க வேண்டும்; மற் றொன்று,  எத்தகைய சூழல் ஏற்பட்டாலும்  சொந்த நாட்டு மக்களை அந்தப் பாதிப்புகளிலிருந்து  பாது காக்க இப்போதே அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.