headlines

img

பாஜகவின் இழிவான அரசியல்

ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு வரும் 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அம் மாநிலத்தை கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. கடந்த தேர்தலில் பாஜக வுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இத னால் துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஹரி யானா ஜனநாயக ஜனதா கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. வழக்கம் போல் ஆதரவு அளித்த கட்சியையே காலி செய்யும் நடவடிக் கையில் இறங்கிய போது அக்கட்சி சுதாரித்துக் கொண்டு ஆதரவை திரும்பப்பெற்றது. உடனே பாஜக, சுயேட்சைகளை வளைத்து போட்டு ஆளு நர் ஆசியுடன் ஆட்சியை தக்க வைத்துக் கொண் டது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுக்கு கடும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதனால் பாஜக  படுதோல்வியை தவிர்க்க போராடுகிறது. பாஜக வேட்பாளர்கள் வாக்கு கேட்க செல்லும் இடங்களில் எல்லாம் வாக்காளர்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 

 மக்களின் வாக்குகளை கவர வேண்டும் என்ப தற்காக எந்த எல்லைக்கும் செல்லவும் பாஜக தயங் காது என்பதற்கு இம்மாநில சட்டப்பேரவைத் தேர்த லும் ஒரு உதாரணம். தேரா சச்சா சவுதாவின் சர்ச்சைக்குரிய தலைவரும், தன்னைத் தானே கடவுள் என்று முன்னிறுத்திக் கொண்ட மனிதரு மான குர்மீத் ராம் ரஹீமுக்கு இம்மாநிலத்தில் கணிசமான ஆதரவாளர்கள்  உள்ளனர். தனது ஆசிரமத்தில் இரண்டு பெண் சீடர்களை பாலி யல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பத்திரிகையாளர் ராம் சந்திர சத்ரபதியைக் கொலை செய்த வழக்கில் சிபிஐ நீதிமன்றம் குர்மீத்ராம் ரஹீமுக்கு ஆயுள் தண்ட னை விதித்தது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு சிறை யில் அடைக்கப்பட்ட குர்மீத்ராம் பாஜக ஆசியு டன் அடிக்கடி பரோலில் வந்துகொண்டிருக்கிறார். 

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மீண்டும் 20 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். இது அப்பட்டமான விதிமீறல் ஆகும்.  குர்மித்ராம் ரஹீ முக்கு சிர்சா மற்றும் அண்டை மாநிலமான பஞ்சா பில் பதிண்டா மற்றும் சங்ரூர் உள்ளிட்ட பகுதிக ளில் பெரும் ஆதரவாளர்கள் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும் கடந்த மக்களவைத்  தேர்தலில், அவரது ஆதரவு கிடைத்தபோதிலும் சிர்சா தொகுதியில் பாஜக வேட்பாளர், காங்கிரஸ்வேட்பாளர் குமாரி செல்ஜா விடம் கிட்டத்தட்ட 2.70 லட்சம் வாக்குகள் வித்தியா சத்தில் படுதோல்வியடைந்தார். ஹிசார் தொகுதி யில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெய்பிரகாஷ், பாஜக வேட்பாளர் ரஞ்சித் சவுதாலாவை கிட்டத்தட்ட 70ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்க டித்தார். பஞ்சாபில் தேரா ஆதரவாளர்கள் அதிகம் உள்ள பதிண்டா மற்றும் சங்ரூர் மக்களவைத் தொ குதிகளில், பாஜக வேட்பாளர்கள் நான்காவது இடத்தையே பிடித்தனர். எனவே குர்மீத்ராம் ரஹீம் ஆதரவு கிடைத்தாலும் ஹரியானா சட்டப்பேர வைத்தேர்தலில் பாஜக மண்ணைக் கவ்வப்போ வது உறுதி.