தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக கல்வித் துறையின் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு எந்த வகையிலும் உகந்ததாக இல்லை. சில நாட்களுக்கு முன்பு மாநில அரசின் பாடத்திட்டம் மிகவும் மோசமாக இருக்கிறது என்றும், ஒன்றிய பாடத்திட்டம் மேம் பட்டதாக இருக்கிறது என்றும் உளறிக் கொட்டி வாங்கிக் கட்டிக் கொண்டார்.
இந்நிலையில் தேசிய ஆசிரியர் தினத்தை யொட்டி ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களை அழைத்து கலந்துரையாடல் என்கிற பெயரில் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் போல இந்துராஷ்டிர வகுப்பு நடத்தியுள்ளார். இந்தியாவை ஒரு ராஷ்டி ரம் என்றும், ராஷ்டிரம் என்பது நாடு கடந்த ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார். இது ஆர்எஸ்எஸ் கூறி வரும் இந்துராஷ்டிரம் மற்றும் அகண்ட பார தத்திற்கான விளக்க உரையே ஆகும்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தான் 60 சதவீத மாணவர்கள் படிக்கிறார்கள். ஆனால் அர சுப் பள்ளிகளில் கல்வித் தரம் மோசமாக உள்ளது. தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது. ஒன்ப தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் 70 சதவீத பேர்களால் இரட்டை இலக்க எண்ணைக் கூட படிக்க முடியவில்லை. 40 சதவீத மாணவர்களால் அவர்களின் பாடப் புத்தகங்களைக் கூட வாசிக்க முடியவில்லை என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதற்கு கற்பித்தல் குறைபாடுகளே காரணம் என்றெல்லாம் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல், தரவுகளும் இல்லாமல் ஆளுநர் வாயில் வந்ததையெல்லாம் உளறியுள்ளார்.
ஆசிரியர் தினத்தன்று தமிழ்நாட்டு ஆசிரியர்க ளை மிக மோசமாக இழிவுபடுத்தியுள்ளார். அர சுப் பள்ளிகளை அழித்து தனியார் பள்ளிகளுக்கு ஆள்பிடிக்கும் ஏஜெண்ட் போல இவர் செயல்படு கிறார். கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகள் இல்லையென்றால் ஏராளமான குழந்தைகளின் கல்விக்கனவே கருகிவிடும்.
ஆளுநர் அடிக்கடி சிலாகிக்கும் ஒன்றிய அர சின் தேசிய கல்விக்கொள்கை என்பது கிராமப்புற கல்வியையும், அரசுப் பள்ளிகளையும் ஒழிப்ப தையே நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த விஷத் தைத்தான் ஆளுநர் ஆசிரியர் தினத்தன்று வன் மத்தோடு கக்கியுள்ளார். ஆளுநர் இவ்வாறு பேசுவதை கல்வியில் சிறந்த தமிழ்நாடு ஒருபோ தும் ஒப்புக்கொள்ளாது, மன்னிக்காது.
மறுபுறத்தில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை மிகவும் கவனத்தோடும், விழிப்போ டும் இருக்க வேண்டும் என்பதையே சில நிகழ்வு கள் உணர்த்துகின்றன. விநாயகர் சதுர்த்தி தொ டர்பாக சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கள் வெளியிட்ட சுற்றறிக்கை, சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் விஷ்ணு என்ற விஷமி யின் அபத்த உளறல்கள் அதிர்ச்சியையும், அச்சத் தையும் அளிக்கின்றன. மதச்சார்பற்ற, அறிவியல் பூர்வமான கல்வியை பள்ளிக் கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும். இதற்கு ஊறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக் கப்பட வேண்டும்.