மருத்துவ உயர்நிலை படிப்பில் இதர பிற் படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஐம்பது சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று கோரி தமிழக அரசும், தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகளும் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்திருப்பதோடு இடஒதுக்கீடு என்பது அடிப் படை உரிமை அல்ல என்றும் கூறியிருப்பது சமூக நீதியை அங்கீகரிக்க மறுப்பதாக உள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்பில் நீட் தேர்வு நடத்துவதிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென்று தமிழக சட்டப் பேரவையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, பாஜக தவிர்த்த அனைத்துக் கட்சிகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தின. ஆனால் மோடி அரசு இந்த நியாயமான குரலை ஏற்க மறுத்து தமிழகத்திற்கு அநீதி இழைத்தது. இதற்கு காரண மாக உச்சநீதிமன்ற உத்தரவை மோடிஅரசு மேற் கோள் காட்டியது. இளநிலை மருத்துவப்படிப்பில் தமிழகத்தின் நியாயமான கோரிக்கைக்கு முட்டுக் கட்டை போட்ட உச்சநீதிமன்றம் தற்போது முது நிலை மருத்துவப் படிப்பில் சமூக நீதி அடிப்படை யிலான கோரிக்கைக்கும் முட்டுக்கட்டையாக உள்ளது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யுமாறு கூறியதோடு உச்சநீதிமன்ற நீதி பதிகள் நின்றிருக்கலாம். ஆனால் இடஒதுக்கீடு அடிப்படை உரிமையல்ல என்று கூறியிருப்பதன் மூலம் சென்னை உயர்நீதிமன்றமும் இதை ஏற்கக் கூடாது என்று சமிக்ஞை செய்துள்ளது.
தமிழக அரசு மட்டுமின்றி, ஆளும் கட்சியான அதிமுக, எதிர்க்கட்சியான திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளோடு அதிமுகவை ஆதரிக்கும் பாமக போன்ற கட்சிகளும், முது நிலை மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோ ருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று கோரியிருந்தன. இந்த ஒன்றுபட்ட குரலை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கக்கூட மறுக்கிறது.
மாநிலங்கள் மத்திய தொகுப்பிற்கு ஐம்பது சதவீத முதுநிலை மருத்துவ படிப்புகளை வழங்கு கின்றன. இதில் அந்தந்த மாநிலங்களில் பின் பற்றப்படும் இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவதே நியாயமானது. இதில் குழப்பம் இருப்பதால்தான் நடைமுறைப்படுத்த முடிய வில்லை என்று மத்திய பாஜக அரசு ஜால்சாப்பு சொல்கிறது.
மத்திய அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு மண்டல் குழு பரிந்துரை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும்போது இதில் மட்டும் குழப்பம் என்று கூறுவது ஏன்? அதிகமான மருத்துவக் கல்லூரி களை கொண்டிருக்கிற தமிழகம் போன்ற மாநி லங்கள்தான் இதில் பெரும் பாதிப்பை சந்திக் கின்றன. கடந்த இரு ஆண்டுகளிலேயே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களை பிற் படுத்தப்பட்டோர் இழந்துள்ளனர்.
சமூக நீதிக்கான போராட்டங்களின் மூலம் நீதி, கடந்த காலங்களில் நேர் செய்யப்பட்டுள் ளது. இப்போதும் அதற்கான தேவை உள்ளது. அரசியல் சாசனத்தில் முதல் திருத்தத்திற்கே வகுப்புவாரி பிரதிநிதித்துவ கோரிக்கைதான் அடிப்படையாக இருந்தது என்பது வரலாறு.