தமிழகத்தில் வியாழனன்று ஒரே நாளில் 4,343 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகி யுள்ள நிலையில், இந்த தொற்றினால் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 1லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரசு தருகிற விபரங்களின் படி குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த போதும், உயிரி ழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதி கரித்துக் கொண்டிருப்பது அச்சமூட்டுகிறது.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் மட்டுமின்றி மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் இந்த தொற்று அதி கமாகிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சென்னை க்கு அடுத்தபடியாக மதுரை மாநகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் தொற்றினால் பாதிக்கப்படுப வர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னையில் 62,598 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட தலைநகர்களில் 3,133 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு, காஞ்சி புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களை ஒப்பிடும்போது, மதுரை மாவட்டத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.
மதுரையில் தற்போது 1500பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு 4ஆயிரம் பேருக்காவது பரி சோதனை செய்யப்பட வேண்டும். மதுரையில் மட்டு மின்றி வட்டத் தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் சோதனைக்கான ஏற் பாடுகள் செய்யப்படுவது அவசியம். மதுரை மாவட்ட கிராமங்களிலும் கொரோனா தொற்று அதி கரித்து வரும் நிலையில் இது அவசியமாகிறது.
இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் முன்னெப் போதும் இல்லாத அளவுக்கு தொற்று அதி கரித்து வரும் நிலையில், சோதனை அதிகரிக்கப் படுவதும் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் அதிகரிக்கப்படுவதும் அவசி யம். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தமிழகம் முழுவதும் 7185ஆயிரம் படுக்கைகள் தயாராக இருப்பதாகவும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் போது மான அளவு வெண்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி யுள்ளார்.ஆனால் சென்னை உள்பட அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத நிலை உருவாகியிருப்பதாக வரும் தகவல்களை மாநில அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
கொரோனா தடுப்பு தொடர்பாக எதிர்க்கட்சி களால் முன்வைக்கப்படும் விமர்சனத்தை அரசி யல் செய்வதாக கூறி ஆளுங்கட்சி தரப்பு அலட்சி யப்படுத்தும் போக்கே உள்ளது. ஆக்கப்பூர்வ மான விமர்சனங்களை உள்வாங்கிக் கொண்டு, கேரளம் உள்ளிட்ட பிற மாநில அனுபவங்களை யும் கற்றுக் கொண்டு தமிழகத்தில் கொரோனா நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சையை தீவிரப் படுத்த வேண்டும். உண்மையான சவாலை இப்போதுதான் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மாநில அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.