headlines

img

முளையிலேயே கிள்ளி எறிக!

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாட்டம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் நவ. 4 அன்று  தனது வீட்டுக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வேகமாக காரில் வந்த திருமலைக்கொழுந்துபுரம் கிராம இளைஞர்கள் இவர்மீது இடிப்பது போன்று வேகமாக ஓட்டியிருக்கின்றனர். ‘ஏன் இப்படி செய்கிறீர்கள்?’ என கேட்டபோது, காரில் இருந்த மூன்று பேரும் இறங்கி வந்து அவரை தாக்கியுள்ளனர். இதன்பிறகு மாலையில் 9 பேர் அந்த இளைஞரின் வீட்டுக்குச் சென்று மீண்டும் கடுமையாக தாக்கியுள்ளனர். 

தாக்குதலில் தொடர்புடையதாக 5 பேரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை திருத்தச் சட்டம், கொலை முயற்சி, அவதூறாகப் பேசுதல் உள்பட 8 பிரிவுகளின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது வரவேற் கத்தக்கது.

ஆனால் கடலூர் மாவட்ட காவல்துறையின் நடவடிக்கை வேறுமாதிரியாக உள்ளது.  புவனகிரி அருகேயுள்ள மஞ்சக்கொல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பத்தை சாதி ஆதிக்க சக்திகள் சிலர் சேதப்படுத்தி யுள்ளனர். இது தொடர்பாக புகார் அளிக்கப் பட்ட பின்னரும் யாரும் கைது செய்யப்பட வில்லை. இந்நிலையில், மீண்டும் கொடிக் கம்பத்தை அடியோடு அறுத்தெடுத்துக் கொண்டு போய்விட்டனர். அது குறித்தும் விசிக தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டது. வழக்குப் பதிவானது. ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மஞ்சக் கொல்லை அருகேயுள்ள உடையூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பையொட்டி  அதே  கிராமத்தைச் சார்ந்த  சிலர் மது அருந்தி யுள்ளனர். ‘ஊரைத் தாண்டிப்போய் குடியுங்கள்’ என்று சொன்ன பட்டியலின இளைஞர்களை அவர்கள் தாக்கியுள்ளனர்.

பட்டியலின மக்களை தாக்கும் வகையில் சாதி உணர்ச்சிகளை தூண்டும் வகையில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர் பேசி யிருப்பது அம்மாவட்டத்தில் சமூக நல்லி ணக்கத்தை சிதைத்துவிடும். காவல்துறையினர் விழிப்புடன் இருந்து இவர்கள் மீது  நடவ டிக்கை எடுக்கவேண்டும். ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கா மல் இருந்தால் பட்டியலின மக்கள் மீதான தாக்கு தல்கள் தொடர்வதற்கே அது ஊக்கமளிக்கும். 

எனவே சமூக நல்லிணக்கத்திற்கு தீங்கு விளை விக்கக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்கக்கூடாது.  இளைஞர்களும்  வெறுப்பு அரசியலை நிராகரித்து மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க முன்வர வேண்டும்.