headlines

img

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் அடங்காத ஆணவம்

அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காகவும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் உத்தரப் பிரதேச பாஜக அரசு புல்டோசர்களை பயன் படுத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் இரண்டு நாட்களுக்கு முன்பு  தீர்ப்பளித்தது. ஆனால் முதல்வர் ஆதித்யநாத்தோ, லக்னோவில் நடந்த  அதிகாரப்பூர்வ நிகழ்வில் சிரித்துக் கொண்டே, “எல்லோருடைய கைகளும் புல்டோசருக்கு பொருந்தாது” என்று கூறி சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷை யாதவை வம்புக்கிழுத் துள்ளார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று கருத்து தெரிவித்த அகிலேஷ், 2027 ஆம் ஆண்டு நடை பெறவுள்ள உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேர வைத் தேர்தலுக்குப் பிறகு எல்லா புல்டோசர்க ளும் கோரக்பூர் (ஆதித்யநாத்தின் சொந்த ஊர்)  நோக்கித் திரும்பும் என்று கூறியிருந்தார். இதற்குத் தான் ஆதித்யநாத் அப்படி கூறியி ருக்கிறார். 

2017 ஆம் ஆண்டு முதல் தனது அரசியல் எதிரிகள் மற்றும் எளிய குடிமக்களின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களை, பாஜக அரசு புல்டோசர்களைக் கொண்டு இடித்து வருகிறது. நீதிமன்றத்தில் இருந்து உத்தரவைப் பெறாமல் சட்டத்திற்குப் புறம்பாக முதலமைச்சரின் நேரடி உத்தரவில் இந்த இடிப்புகள் நடைபெற்று வருவ தற்கு அனைத்து அரசியல் கட்சிகளும்  மனித உரிமை அமைப்புகளும் கடும் கண்டனம் தெரி வித்து வருகின்றன. 

குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக ஒருவ ரின் வீட்டை எப்படி இடிக்க முடியும்; அவர் ஒரு குற்றவாளியாகவே இருந்தாலும், சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றா மல் அதைச் செய்ய முடியாது  என்று   உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கூறிய பின்னரும் இப்படிப் பேசுகிறார் என்றால்  அவருக்கு எங்கி ருந்து அந்த தைரியம் வந்தது?

உச்ச நீதிமன்றத்தின் கடுமையான எச்சரிக்கை க்குப் பிறகும் அவர் திருந்தவில்லை. புல்டோசர் பிரச்சனையே இன்று கேள்விக்கு உள்ளான நிலை யில், ஊழலில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களை மீட்டு ஏழைகளுக்குத் தரப் போகிறாராம். அவர் யாருடைய சொத்துக்களைச் சொல்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். சிறுபான்மை மக்களை யும் தனது அரசியல் எதிரிகளையும் அச்சுறுத்துவ தற்காகவே அவர் அப்படிப் பேசியிருக்கிறார். இது  வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநி லத்தில் பாஜக மண்ணைக் கவ்வியது. சிறுபான்மை மக்களுக்கு எதிரான அரசியலை தீவிரப்படுத்து வதன் மூலம் பெரும்பான்மை மக்களின் ஓட்டுக்களை அள்ளிவிடலாம் என்று ஆதித்ய நாத் கணக்குப் போடுகிறார். அது தப்புக் கணக்கு. ஏனென்றால் ராமர் கோவில் அமைந்துள்ள மண்ணின் மைந்தர்களே அவர்களை நம்ப வில்லை. எனவே  ஆதித்யநாத் அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.