ஒன்றிய பாஜக கூட்டணி அரசின் 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் வெளிப்படும் மானி யக் குறைப்பு, ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிக்கலாக்கும் என்பது தெளிவு. ₹4,26,216 கோடியாக குறைக்கப்பட்டுள்ள மொத்த மானியம், கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. 2020-21-ல் ₹7,58,165.34 கோடியாக இருந்த மொத்த மானியம், 2025-26-ல் ₹4,26,216.21 கோடியாக வெட்டப்பட்டுள்ளது. இது 44% குறைப்பாகும். குறிப்பாக உணவு மானியம் ₹5,41,330.14 கோடியி லிருந்து ₹2,03,420 கோடியாக குறைக்கப்பட்டுள் ளது - 62% வெட்டு. உணவு மானியம் மற்றும் உர மானியம் ஆகிய இரண்டிலும் ஏற்பட்டுள்ள வெட்டு, விவசாயிகள் மற்றும் நுகர்வோர் ஆகிய இரு தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும். பொது விநியோக திட்டத் தின் கீழ் தானிய ஒதுக்கீடு 9.37 கோடி டன்னிலிருந்து 6.39 கோடி டன்னாக குறைக்கப்பட்டுள்ளது. இது 81.35 கோடி மக்களின் உணவுப் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது.
உர மானியம் குறைப்பு விவசாயிகளின் செல வை அதிகரித்து, உணவு உற்பத்தியை பாதிக்கும். டிஏபி உரத்தின் விலை ஏற்கனவே டன்னுக்கு ₹52,000 ஆக உயர்ந்துள்ளது. போர் மற்றும் பருவ நிலை மாற்றம் காரணமாக உலக உணவு விலைகள் ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில், இந்த மானியக் குறைப்பு ஏழை மக்களின் உணவுப் பாதுகாப்பை மேலும் அச்சுறுத்தும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மானியத்தின் பங்கு 3.82% லிருந்து 1.19% ஆக சரிந்துள்ளது. இது ‘நலன் அரசு’ என்ற கருத்தாக்கத்திலிருந்தே விலகி செல்வதைக் காட்டுகிறது. கடந்த மூன்று ஆண்டு களில் மத்திய அரசு கார்ப்பரேட் வரிகளை 30% லிருந்து 22% ஆக குறைத்துள்ளது. ஆனால் மக்க ளின் அடிப்படை தேவைகளுக்கான மானியங் களை வெட்டுகிறது. இது யாருக்கான அரசு என்பதை தெளிவாக காட்டுகிறது. கொரோனா தொற்றுநோய், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி மற்றும் பணவீக்கத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்களின் வாழ் வாதாரத்தை இந்த மானியக் குறைப்பு மேலும் சிக்கலாக்கும். இது ஏழை-பணக்காரர் இடை வெளியை அதிகரித்து, சமூக அமைதிக்கே சவால் விடும். விவசாயிகளுக்கான உரமானியம் குறைப்பும், பொதுமக்களுக்கான உணவு மானியம் குறைப்பும் மோடி அரசு ஒட்டுமொத்த இந்திய ஏழைகளின் மீது நடத்திய இரட்டைத் தாக்குதலாக அமைந்துள்ளது. உலக வங்கி மற்றும் பன்னாட்டு நாணய நிதி யத்தின் தாராளமய கொள்கைகளை பின்பற்றும் மோடி அரசு, மக்கள் நலனை காக்கும் தனது அரசியலமைப்பு கடமையிலிருந்து விலகி செல்கிறது. மக்கள் நலனை காக்கும் அரசின் அடிப் படை கடமையை நிறைவேற்ற, மானியங்களை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். இந்த கொள்கைகளை எதிர்த்து மக்கள் சக்திகள் ஒன்றி ணைந்து போராட வேண்டியது காலத்தின் கட்டாயம்.