headlines

img

பிரதமர் மோடியின் மவுனம் கலையுமா?

பிரதமர் மோடியின் மவுனம் கலையுமா?

ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக தாம் மகிழ்ச்சியாக இல்லை என்றும், தம்மை மகிழ்ச்சிப்படுத்துவது மோடியின் பொறுப்பு என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உத்தரவு போட்டிருந்தார். இதைத் தொ டர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டு வருகிறது.

ஈரானிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்கக் கூடாது என்று டிரம்ப் மிரட்டினார். இதற் கும் ஒன்றிய அரசு இணங்கி இருப்பதாகவே தெரிகிறது. 

அடுத்து வெனிசுலா ஜனாதிபதி மதுரோவை அமெரிக்க வல்லரசு அராஜகமாக கடத்திக் கைது செய்து, அந்த நாட்டின் எண்ணெய் கிணறுகளையும் கைப்பற்றியுள்ள நிலையில், இனி வெனிசுலாவிடமிருந்து இந்தியா எண் ணெய் வாங்கும் என்றார் டிரம்ப். இதுவும் கூட நடப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது. மேலும்  பிரதமர் மோடியின் கார்ப்பரேட் கூட்டாளியான அம்பானியின் நிறுவனம் வெனிசுலாவில் எண்ணெய் கிணறுகளை கைப்பற்ற இருப்பதா கவும் தகவல்கள் வெளியாகின.

இந்தப் பின்னணியில்தான் மாநிலங்களவை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் உறுப்பி னர் ஜான் பிரிட்டாஸ் இந்தியாவின் எரிபொருள் துறை அமைச்சராக டொனால்டு டிரம்ப் செயல் படுகிறாரா என்று கேள்வி எழுப்பினார். 

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையி லான மோதலை நான்தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் பல முறை சொன்னபோதும், பிரதமர் மோடி மறுப்பு தெரிவிக்கவில்லை. மோடி அமெ ரிக்காவில் இருந்தபோதே இந்தியர்களுக்கு கைவிலங்கு பூட்டி நாடு கடத்தியது டிரம்ப் நிர்வாகம். இதற்கு ஒன்றிய அரசு கண்டனம் தெரி விக்கவில்லை.

இந்திய இறக்குமதி பொருட்களுக்கு டிரம்ப் நிர்வாகம் வரி மேல் வரி போட்டாலும் எதிர்ப்ப தற்கு பதிலாக தாஜா செய்வதிலேயே நரேந்திர மோடி அரசு கவனம் செலுத்தியது. இந்தியா வுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக உடன்பாடு இந்தியப் பொருளாதா ரத்தின் மீது பேரிடியாக இறங்கியுள்ளது. ஆனால் இதையே சாதனையாக மோடி அரசு பீற்றிக் கொள்கிறது. 

இந்த நிலையில், ‘மோடி என்னை நேசித்துத் தான் ஆக வேண்டும். இல்லையெனில் நான் அவரின் அரசியல் வாழ்க்கையையே அழித்து விட முடியும்’ என்று டிரம்ப் மிரட்டியுள்ளார். எப்ஸ்டீன் கோப்புகள் வெளியாகியுள்ள நிலை யில், டிரம்ப்பின் இந்த மிரட்டல் பல்வேறு கேள்வி களை எழுப்புகிறது. இவ்வாறு டிரம்ப் மிரட்டி யுள்ளது குறித்து பிரதமர் மோடி வாய் திறந்து விளக்கம் அளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள் ளது. இது இரு தனிநபர்களுக்கு இடையிலான விவகாரம் அல்ல, இந்தியாவின் இறை யாண்மை தொடர்புடையது. பிரதமர் மோடி இப் போதாவது மவுனம் கலைப்பாரா?