headlines

img

என்ன யோக்கியதை இருக்கிறது?

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்... நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்”- மகாகவி பாரதியின் வரிகளை, சென்னையில் ஞாயிறன்று நடைபெற்ற விழாவில் முழங்கி, அதற்கு பொருளும் கூறி, தமிழக மக்களை கவர்வதற்காக நாடகம் போட்டார் பிரதமர் நரேந்திரமோடி.நாட்டின் ஒட்டுமொத்த வளங்களையும், செல் வங்களையும், பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் கார்ப்பரேட் ம்பெனிகளுக்கு தாரைவார்ப்பதில் புதிய உச்சத்தை எட்டியுள்ள பிரதமர்நரேந்திரமோடி, “பொழுதெல்லாம் எங்கள் செல்வம்கொள்ளை கொண்டு போகவோ - நாங்கள் சாகவோ” என்று கொதிப்புடன் பாடிய மகாகவியைதுணைக்கு அழைத்தது தமிழர்களுக்கு இழைக் கப்பட்ட பெருத்த அவமானம்.

சரியாக 10 நாட்களுக்கு முன்பு இவரது அரசுநாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையும், 2021 - 22 நிதி அறிக்கையும் போதாதா, இவரது ஆட்சி பெரும் கார்ப்பரேட் கூட்டுக் களவாணிகளின் ஆட்சி என்பதை நிரூபிக்க!“கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைகள்” என்று ஏற்கெனவே கூறப்பட்டு வந்ததன் அர்த்தத்தையே மாற்றிவிட்டது மோடி அரசு. ராணுவத்தளவாடங்கள் உற்பத்தி செய்யும் பொதுத்துறை பாதுகாப்பு தொழில் நிறுவனங்கள் உள்பட, வங்கிகள், எல்ஐசி, பிஎஸ்என்எல், மின்சாரத் துறை, ரயில்வே என நாட்டின் உயிர் நாடிகளாக இருக்கக்கூடிய அனைத்து கேந்திர துறைகளையும் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் முற்றாக சூறையாடுவதற்கு வழி திறந்திருக்கிறது 2021 - 22 மத்திய நிதிநிலை அறிக்கை.

2017 - 18 நிலவரப்படி 331 பொதுத் துறை நிறுவனங்களை இந்தியா கொண்டிருந்தது. இதில் ஆண்டொன்றுக்கு ரூ.2500 கோடிக்கும் அதிகமாக லாபம் ஈட்டி தரும் 10 பெரும் நிறுவனங்களும் அடக்கம். மொத்தத்தில் இந்த பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் 2019 ஆம் ஆண்டில் கிடைத்த லாபம் மட்டும் ரூ.16.41 லட்சம் கோடி. இந்த பொதுத்துறை நிறுவனங்களில் மிக அதிக சொத்துக்களை கொண்டது இந்திய ரயில்வே. இது உலகின் மிகப்பெரிய ரயில்வேக்களில் ஒன்று. அதேபோல 45 கோடி மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும்எல்ஐசி, உலகின் மிகப் பெரும் காப்பீட்டு நிறுவனமாகும். இந்த பட்ஜெட்டில் மேற்கண்ட மாபெரும்நிறுவனங்களின் பங்குகளை பெருமளவு தனியாருக்கு தாரைவார்க்க அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியாவின் மகத்தானபிஎஸ்என்எல் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோவை வளர்க்கும் ஒரே நோக்கத்திற்காக 4ஜி அலைக்கற்றை மறுக்கப்பட்டு கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டது. இவை மட்டுமல்ல, தேசத்தின் மாபெரும் சுரங்கங்கள், கனிம வளங்கள்; கல்வி, சுகாதாரம், உணவு ஆகிய முதன்மை துறைகள்; ஒட்டுமொத்தவிவசாயம் - என அனைத்தும் அதானி, அம்பானிகார்ப்பரேட் கும்பல்களுக்கு தாரை வார்க்கும் கூட்டுக் களவாணியின் அரசுக்கு மகாகவியின் கவிதையை பாட என்ன யோக்கியதை இருக்கிறது?