வாக்காளர் பட்டியல் செம்மையுற
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது என்றும் இதற்கான பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கி யுள்ளோம் என்றும் தமிழக தேர்தல் துறை அதிகாரி கள் கூறியுள்ளனர். அத்துடன் நமது மாநிலத் துக்கென பிரத்யேகமான அறிவுறுத்தல்களை ஆணையம் வழங்கும் என்றும் அதன் அடிப்ப டையிலேயே சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான உத்தரவுகளை தமிழக தேர்தல் துறை வெளியிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு நாடு முழுமைக்கும் பொருந்தும் என்றும் திருத்தம் சட்ட விரோதமாக நடைபெற்றிருந்தால் நிச்சயம் அது ரத்து செய்யப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் உள்ள தவறு களை, நடந்திருக்கும் முறைகேடுகளை சுட்டிக் காட்டியதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியை உறுதிமொழிப் பத்திரம் தரவேண்டும் என்று தேர்தல் ஆணையம் நிர் பந்தித்ததுடன், அவ்வாறு வழங்கவில்லை எனில் அவர் கூறியது உண்மையல்ல என்றும் பாஜகவி னரின் வழக்கறிஞர் போலவே பேசியது. ஆனால் தேஜஸ்வி யாதவ் பெயர் இரண்டு இடத்தில் உள்ளது; மு.க.ஸ்டாலின் தொகுதியில் குறைபா டுள்ளது என்றெல்லாம் குறை கூறிய போது பாஜக வினரிடம் கேள்வி எதுவும் தேர்தல் ஆணையம் கேட்கவில்லை.
பிரதமர் நரேந்திர மோடியோ, சட்ட விரோத குடியேறிகளை பாதுகாக்கிறது காங்கிரஸ் என்று குற்றம் சாட்டுவதிலேயே குறியாக இருக்கிறார். அவர் எப்போதுமே தேர்தல் கால மன நிலையி லேயே பேசுகிறார். ஆனால் 11 ஆண்டு காலமாக பிரதமராக இருக்கும் மோடியை, சட்ட விரோத குடியேறிகள் என்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்பதை யார் தடுத்தார்கள்?
வாக்காளர் பட்டியலில் பிரச்சனைகள் எழுப்பப்பட்டால் அதற்கு விளக்கம் அளிப்பதை விட்டு விட்டு விசாரணை நடத்தி நடவடிக்கை மூலம் சரி செய்வதே தேர்தல் ஆணையத்தின் வேலையாக இருக்க வேண்டும் என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி கூறியது மிகவும் பொருத்தமானது. அதுவே சுயேச்சையான தேர்தல் ஆணையத்தின் செயல்பாடும் ஆகும்.
தற்போது கூட தமிழகத்தில் குன்னூர் தொகுதியில் ஒரு வீட்டில் 79 வாக்காளர்கள் உள்ள னர் என்ற புகார் எழுப்பப்பட்டது. அதற்கு, அது கதவுஎண் அல்ல, வார்டு எண் என்று இருந்திருக்க வேண்டும் என்று தொடர்புடைய தேர்தல் அதிகாரி உடனடியாக விளக்கம் அளித்திருக்கிறார். எனவே இத்தகைய திசை வழியில் தமிழக வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் நடக்கட்டும். அரசியல் கட்சிகளும் தன்னார்வக் குழுக்களும் கவனமுடன் செயல்படட்டும். அப்போது தான் சேர்த்தல் நீக்கல் உள்பட வாக்காளர் பட்டியல் மேம்படுத்தப்படும்.