லாரிகளுக்கு ஜிபிஆர்எஸ் முறையில் சுங்கம் வசூலிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சரக்கு லாரி எவ்வளவு கிலோமீட்டர் நெடுஞ்சாலையில் பயணிக்கிறதோ அந்த அள விற்கு ஆன்லைனில் சுங்கம் வசூலிக்கப்படும் என்ற புதிய முறையை ஒன்றிய அரசு அமல்படுத்த உள்ளது. இதற்கு லாரி உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே லாரி உரிமையாளர்கள் டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டணம், ஆன் லைன் அபராதம் ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வித விதிமீறலும் இல்லாத லாரிகள் மீதும் சரக்குகளை ஏற்றும் அல்லது இறக்கி வைக்க காத்திருக்கும் லாரி கள் மீதும், கட்டுப்பாடு இல்லாமல் ஆன்லைன் அப ராதம் விதிக்கப்படுவதை ஏற்க முடியாது. லாரி ஒன்றுக்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை ஆன்லைன் அபராதம் விதிக்கப்படுவதால் இந்த தொழில் தொடர்ந்து நலிவடைந்து வருகிறது. இதனால் பலர் லாரி தொழிலை விட்டுச் சென்று விட்டனர்.
லாரிகளை தகுதிச் சான்றுக்காக புதுப்பிக் கும் போது புதிய லாரிகளுக்கு மட்டுமே புதிய ஒளிரும் ஒட்டு வில்லைகளை ஒட்டி ஆன்லைன் மூலம் பதிவு செய்தால் போதுமானது எனவும் போக்குவரத்து ஆணையர், அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தி யுள்ளார். ஆனால் வட்டார போக்குவரத்து அலுவ லர்கள் அதனை பின்பற்றாமல், வேண்டுமென்றே லாரி புதுப்பித்தலை (எப்சி) கால தாமதம் செய்வது சரியல்ல.
மேலும், லாரி, சரக்கு வாகனங்களை பதிவு செய்யும்போது அதற்கான பதிவுச் சான்றிதழ் கள் தபால் மூலம் அந்தந்த வட்டார போக்கு வரத்து அலுவலகங்களிலிருந்து அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால், காலதாமதம் ஏற்பட்டு, உரிய நேரத்தில் சரக்குகள் கொண்டு செல்லமுடியாமல் லாரி உரிமையாளர்கள் பாதிக் கப்படுகின்றனர். ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன புதுப்பிப்பு உரிம சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் அல்லது அவர்கள் நிய மிக்கும் நபர்கள் நேரடியாக அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இருந்து பெற்றுக் கொள்ள மாநில அரசு வழிவகை செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் இருந்து சுமார் 1.50 லட்சம் லாரிகள் வட மாநிலங்களுக்கு, சரக்குகளை கொண்டு சென்று வருகின்றன. எனவே லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் உடனே நிறைவேற்றவேண்டும். தமிழகத்தில், காலாவதியான 33 சுங்கச்சாவடி களை ஒன்றிய அரசு உடனே அகற்ற வேண்டும். சரக்கு லாரிகள் மீது விதிக்கப்படும் அனைத்து கட்டண உயர்வும் கடைசியில் நுகர்வோரின் தலை யில்தான் சுமையாக இறங்கும் என்பதை ஆட்சி யாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.