headlines

img

திசைகள் தோறும் நம்பிக்கை ஒளியேற்றிய நாயகன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், தலைசிறந்த மார்க்சியச் சிந்தனை யாளரும், இந்திய மக்களின் மனம் கவர்ந்த இடது சாரி இயக்கத் தலைவராகவும் திகழ்ந்த தோழர் சீத்தாராம் யெச்சூரி மறைவுக்கு தீக்கதிர் தனது இரங்கலையும், துயரார்ந்த அஞ்சலியையும் காணிக் கையாக்குகிறது. உழைக்கும் மக்களின் நலன் ஒன்றையே உயிர் மூச்சாக கருதிய தலைவருக்கு தீக்கதிர் தனது செவ் வணக்கத்தை செலுத்துகிறது. 

இந்திய அரசியல் வானில் தனித்துவமிக்க பன்முக ஆற்றல் கொண்ட தலைவராக ஜொலித்த வர் தோழர் சீத்தாராம் யெச்சூரி. மாணவப் பருவத்தி லேயே போராட்டப் பெரு வாழ்வை தனது பாதை யாக தேர்வு செய்து கொண்ட அவர் தனது போராட்டக் குணத்தை  ஒருபோதும் கைவிட்ட தில்லை. இந்திய ஜனநாயகத்தை இருள் சூழ்ந்தி ருந்த அவசர நிலைக் காலத்தின் போது பிரதமராக இருந்த இந்திராகாந்தியை நேருக்கு நேராக  தனது கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்த வர் அவர். அவசர நிலையை எதிர்த்ததால் சிறை வாசம் ஏற்றவர். 

இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாப் பதற்காக அவர் நடத்திய போராட்டங்கள் வர லாற்றுச் சிறப்புமிக்கவை.  நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகள் ஒவ்வொன்றும் கருத்துப் பெட்டகமாகும். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு ஏடான பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஏட்டின் ஆசிரி யராக அவர் பணியாற்றினார். எந்தவொரு சிக்க லான பிரச்சனையையும் எளிமையாக எழுதுவதி லும், பேசுவதிலும் வல்லவர் அவர். இந்திய இலக்கியங்கள் அனைத்தையும் முழுமையாக உள்வாங்கியிருந்த தோழர் யெச்சூரி தன்னுடைய உரைகளிலும், எழுத்துக்களிலும் அதைப் பொ ருத்தமாக பயன்படுத்தும் திறன் கொண்டவர்.

நேபாளத்தில் இடதுசாரி சக்திகளை ஒருங்கி ணைப்பதில் தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தை தொடர்ந்து தோழர் யெச்சூரி மிக முக்கியமான பங் கினை வகித்தார். கட்சியின் சார்பில் சர்வதேசத் துறையின் தலைவராக செயல்பட்ட தோழர் யெச்சூரி உலகளவில் மதிக்கக்கூடிய கம்யூனிஸ்ட் தலைவராக திகழ்ந்தார். 

மத்தியில் மதச்சார்பற்ற கூட்டணி அரசுகள் அமைந்த போதெல்லாம் பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைக்கக்கூடிய மையப் புள்ளியாகவும், முற்போக்கான மக்கள் நலன் சார்ந்த செயல் திட்டங்களை உருவாக்குவதிலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.

மார்க்சியம் ஒன்றே மனிதகுலத்தின் ஒளி விளக்கு என்பதில் தளராத நம்பிக்கை கொண்டி ருந்த அவர், தன்னுடைய குரலாலும், எழுத்தாலும், செயலாலும் தேசத்தின் திசைகளெங்கும் நம்பிக் கை ஒளியினை ஏற்றி வைத்துக் கொண்டேயி ருந்தார். தோழர் சீத்தாராம் யெச்சூரியின் புகழ் வாழ்வு என்றென்றும் நிலைத்திருக்கும். போராடும் இந்தியாவை உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கும் அவரது உழைப்பு.