headlines

img

வார்த்தைப் பந்தல் நிழல் தராது...

கொரோனா தொற்றின் இரண்டாவது அலைஇந்திய மக்களை பெரும் துயருக்கு ஆளாக்கியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். மேற்குவங்க தேர்தல் பிரச்சாரத்தில் முனைப்பாக இருந்த அவர்இரண்டாவது அலை குறித்து கவலை கொண்டுபேசியிருப்பது காலதாமதமான நடவடிக்கையாகும். 

கொரோனா தொற்றால் தற்போது ஏற்பட்டுள்ளசவால் மிகப் பெரியது. அதற்கான உறுதி, தீரம்ஆயத்த நடவடிக்கைகளால் நாம் அதை கடந்துவர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ஆனால்அவர் கூறியுள்ள உறுதி, தீரம் என்பதெல்லாம் வாயளவிலும், வார்த்தையளவிலும் உள்ளதே தவிர செயலில் இல்லை. கொரோனா தொற்றின்இரண்டாவது அலை மிக மோசமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்து வந்த நிலையில்அதற்கான எந்தவொரு ஆயத்த நடவடிக்கைகளிலும் மத்திய அரசு இறங்கவில்லை. மாறாக, கொரோனா பரவலை மேலும் அதிகமாக்கும் வகையிலேயே பிரதமர் மோடி மற்றும்உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நடவடிக்கைகள் அமைந்தன. கும்பமேளாவில் பல லட்சம் பேர்கூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மேற்குவங்கத்தில் எட்டுக் கட்டமாக நடைபெறும் தேர்தலில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் கூட்டத்தைக்கூட்டி பிரதமரும், உள்துறை அமைச்சரும்உரையாற்றினர். 

தடுப்பூசி திருவிழா என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஓரளவு தயக்கம் நீங்கி மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வந்த நிலையில் பல இடங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. 45 வயதுக்குமேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 18 வயதுக்குமேற்பட்டவர்களுக்கும் மே 1ஆம் தேதி முதல் தடுப்பூசி என்பது வரவேற்கத்தக்க ஒன்று. ஆனால்அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டிய முக்கியப் பொறுப்பு மத்தியஅரசுக்கே உள்ளது.

ஆனால் தடுப்பூசி கிடைப்பதற்கான பொறுப்பை மாநில அரசுகளிடம் தள்ளிவிடுவதும், தனியார் மருத்துவமனைகள் மற்றும் வெளிச் சந்தைக்கு முன்னுரிமை அளிப்பதும் அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்ற கோட்பாட்டை தகர்ப்பதாகும். உயிர்காக்கும் இந்தவிசயத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவது கண்டிக்கத்தக்கது.பொதுமக்கள் ஒத்துழைத்தால் பொது முடக்கத்தை தவிர்க்கலாம் என்று பிரதமர் கூறியுள்ளார். ஆனால் பல மாநிலங்களில் முழு நேரமற்றும் பகுதி நேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பது குறித்து மத்தியஅரசு தரப்பிலோ, பிரதமர் உரையிலோ எதுவும் கூறப்படவில்லை. 

 கடந்த ஊரடங்கின் போது மத்திய நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்ட நிவாரண நடவடிக்கைகள் அனைத்தும் மக்களுக்கு வந்து சேரவில்லை. மாறாக ஏற்கெனவே ஏராளமான வரிச்சலுகைகளையும், மானியத்தையும் அனுபவித்து வரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கே கைகொடுத்தது. அப்போது ஏற்பட்ட நெருக்கடியிலிருந்தே மீள முடியாத மக்களுக்கு இப்போது நிவாரணம் அளிப்பது மிக அவசியமாகும். ஆனால்பிரதமர் அதுகுறித்து எதுவும் பேச மறுக்கிறார்.