headlines

img

ஒற்றுமைக்கு ஊறு யார்?

இந்தியாவின் பன்முகத் தன்மையில் காணப் படும் ஒற்றுமை நமது எதிரி நாடுகளை கலங்க டிக்கச் செய்துள்ளது என்று குஜராத் மாநிலம் கெவாடியா நகரில் திங்களன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அத்துடன் நமது ஒற்றுமையை உடைக்க முயற்சிப்பவர்கள் வெளிப்படையான எதிரிகள் மட்டுமல்ல, நமக்குள்ளே ஒருவராகவும் ஒளிந்திருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார். அவர் சொல்லாமல் விட்டது அது நாமே தான் என்பதுதான்.

இந்தியா பல்வேறு இன, மொழி, மத, பண்பாடு கொண்ட மக்கள் வாழும் பரந்து விரிந்த நாடு; துணைக்கண்டம். இத்தகைய பண்பு நலன்கள் கொண்ட நாட்டு மக்களை ஒருங்கி ணைத்திருப்பது வேற்றுமையில் ஒற்றுமை எனும் இழைதான். அதை விடுதலைப் போராட்ட இயக்கமே இந்தியர் எனும் ஒரே மனிதனாக வீறு கொண்டு எழச் செய்தது. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக ஏற்பட்ட ஒற்றுமை உணர்வே அதைச் சாத்தியமாக்கியது.

அந்த நாளிலும் ஆங்கிலேயர்களுக்கு தாசானுதாசர்களாக இருந்து விடுதலைப் போராட்டத்துக்கு எதிராகவும் காட்டிக் கொடுத்தும் தங்களது சனாதன தர்மத்தைக் காப்பாற்றிக் கொண்டவர்கள் தான் பாஜக வின் முன்னோடி அமைப்புகளான ஆர்எஸ்எஸ், இந்துமகா சபை போன்றவை. அவர்கள் தான் இந்த நாட்டை மதரீதியாக இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்களி டம் முதலில் கோரிக்கை வைத்தவர்கள். 

விடுதலைப் போராட்ட வீரர்களும் தீரர்க ளும் ‘செப்புமொழி பதினெட்டுடையாள்- எனில் சிந்தனை ஒன்றுடையாள்’ என்று மகா கவி பாரதி பாடியதற்கேற்ப ஒற்றுமை உணர்வுடன் இணைந்து போராடித் தான் சுதந்திரம் பெற்ற னர். இப்போது ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால் ஒற்றுமை எனும் பெயரால் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு  என்று அனைத்திலும் ஒற்றைத் தன்மையை நோக்கி நாட்டைக் கொண்டு செல்லும் நடவ டிக்கைகளை உங்களின் ஆட்சி மேற் கொண்டுள்ளது.

இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பது, சிறு பான்மை முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு எதிராக கொடுங்கோன்மைச் செயல்பாடு, ஒன்றிய அரசு வசமே அனைத்து அதிகாரங்களையும் குவித்து கூட்டாட்சி முறைக்கு குழிபறிப்பது, மதச்சார்பின்மைக்கு வேட்டு வைப்பது, ஜன நாயகத்தை குழிதோண்டி புதைத்திட முயல்வது என்று நடந்து கொண்டு ஒற்றுமைக்கு உலை வைத்துக் கொண்டிருப்பது உங்களது ஆட்சி தான். அந்த வகையில் உங்களுக்குள்ளே ஒருவ ராக ஒளிந்திருப்பதல்ல; அது நீங்களே! உங்கள் படை, பரிவாரங்களே! 

அதனால் இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊறு நேருமென்றால் அது உங்களால் தான் நடக்கும். எனவே உங்களது ஒற்றைத் தன்மை திணிப்பை கைவிட்டாலே நாட்டின் பன்முகத்தன்மையும் ஒற்றுமையும் பாதுகாப்பாக இருக்கும். கவன மாக இருக்க வேண்டியது உங்களிடம் தான்.