ஒன்றிய அரசின் இரட்டை வேடமும் அலட்சியமும்
நடப்பாண்டின் குறுவைப் பருவத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு 14.11 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள் முதல் செய்யப்பட்டு, தமிழ்நாடு வரலாற்றில் புதிய உச்சம் தொட்டிருப்பது பாராட்டிற்குரியது. இந்தச் சாதனைக்கு நடுவில், தமிழக விவசா யிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக் கும் ஒரு நெருக்கடி தற்போது தலைதூக்கியுள் ளது. வடகிழக்குப் பருவமழையின் அச்சுறுத்த லை கருத்தில் கொண்டு, நெல் கொள்முத லுக்கான ஈரப்பத அளவை 17 விழுக்காட்டிலி ருந்து 22விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்று மாநில அரசின் நியாயமான கோரிக்கையை, ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது அதிர்ச்சிய ளிக்கிறது.
புதனன்று கோவையில் விவசாயிகள் மாநாட்டில் பேசிய பிரதமர், வேளாண் துறை யை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகப் பெருமை பேசினார். ஆனால், அவர் பேசி முடித்துச் சென்ற மறு கணமே, ஒன்றிய அரசு தமிழக விவசாயிகளு க்கு பாதகமான ஒரு முடிவை அறிவித்திருப் பது அப்பட்டமான அரசியல் துரோகமாகும். ஒருபுறம் மண்வளம், இயற்கை விவசாயம் என்று பேசுவதும், மறுபுறம் மழையால் பாதிக் கப்படும் விவசாயிகளைப் பாதுகாக்கத் தயங்குவதும் ஒன்றிய அரசின் நயவஞ்சகமான இரட்டை வேடத்தைக் காட்டுகிறது. கள யதார்த்தத்திற்கும் ஒன்றிய ஆட்சியாளர்களின் வெற்றுப் பேச்சுகளுக்கும் இடையிலான பெரிய முரண்பாடு இதில் வெளிப்படுகிறது.
கடந்த காலங்களில் இயற்கைப் பேரிடர்க ளின்போது ஒன்றிய அரசு இதேபோன்ற கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. ஆனால், தற்போது பிடிவாதமாக மறுப்பது வரும் சட்டமன்றத் தேர்தலைக் குறிவைக்கும் அரசி யல் காழ்ப்புணர்ச்சியே அன்றி வேறில்லை. விவசாயிகளின் நலன் குறித்த கரிசனத்தை விட, அரசியல் கணக்குகள் தான் ஒன்றிய அரசு க்கு முக்கியம் என்பதையே இது காட்டுகிறது.
நெறிமுறைகளைக் காரணம் காட்டி, தமிழக விவசாயிகளின் துயரத்தை மேலும் அதிக ரிப்பது மனிதாபிமானமற்ற செயல். ஈரப்பதம் அளவு அதிகரிக்கப்படாவிட்டால், நெல் கொள் முதல் நிலையங்களில் மூட்டைகள் நிராகரிக் கப்படும். இதனால், விவசாயிகள் தாங்கள் கஷ்டப்பட்டு விளைவித்த நெல்லை, தனியார் வணி கர்களிடம் மிகக் குறைந்த விலைக்கு விற்க நிர்பந்திக்கப்படுவார்கள். இது விவசாயிகளின் இழப்பைக் காசாக்கும் கொடூரமாகும். மேலும், கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத் தொகையை உடனடியாக அறி விக்காததும் ஒன்றிய அரசின் அலட்சியப் போக்கையே பிரதிபலிக்கிறது. எனவே மனி தாபிமான அடிப்படையிலும் மழை பாதிப்பை கருத்தில்கொண்டும், நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22 விழுக்காடாக உயர்த்த ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
