சகிப்பின்மையின் இருப்பிடம்
உச்சநீதிமன்றம் இடிப்பு அரசியலை நிறுத்திட தெளிவாக உத்தரவிட்ட பின்னும் பாஜக மாநில அரசுகள், அந்த இழிவான நடவடிக்கைகளை தொடர்ந்து அடாவடியாக அரங்கேற்றியே வரு கின்றன. 1990களில் நவதாராளமயக் கொள்கைக ளோடு, மசூதி இடிப்பு முஸ்லிம் வெறுப்பு இந்துத்துவா மதவெறித் தாண்டவம் உத்தரப்பிர தேசத்தில் துவங்கியது. பின்னர் குஜராத்திலும், உ.பி.யிலும் தொடர்ந்த கொலைவெறி, இடிப்பு அரசியல் அடுத்தடுத்து ம.பி,, தில்லி என்று பாஜக ஆளும் மாநிலங்களில் நிகழ்வது வாடிக்கையாகி விட்டது.
மாநிலத்துக்கு மாநிலம் பாஜகவின் வெறுப்பு அரசியல் வெவ்வேறு வடிவம் கொள்கிறது. அது முஸ்லிம்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்கள் மற்றும் பழங்குடியினர் மீதும் வெறுப்பு அரசியலும் எரிப்பு அரசியலும் பாஜகவினரால் திணிக்கப்பட்டு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. வன்முறைகளில் ஈடுபடும் இந்துத்துவக் கும்பல் மீது காவல்துறை யின் சுண்டுவிரல் கூட படுவதில்லை. ஆனால் சிறு பான்மையினரின் சின்னஞ்சிறு குழந்தையைக் கூட விட்டு வைப்பதில்லை என்பதை நாட்டு மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரங்கள் குறி வைத்து விட்டால், ஏதாவது ஒரு காரணம் கற்பித்து வன்முறையில் இறங்கி ரணகளமாக்கி சிதைத்து சின்னாபின்னமாக்கி விடுகிறார்கள். தற்போது மகா ராஷ்டிராவில் ஔரங்கசீப்பை வைத்து முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த முஸ்தீபுகள் செய்து இறங்கி விட்டார்கள். நாக்பூரில் பாஹிம்கான் என்பவர் வீட்டை இடித்துத் தள்ளிவிட்டனர்.
அதுமட்டுமின்றி மகாராஷ்டிர பாஜக கூட்டணி ஆட்சிக்கு வர கட்சியை உடைத்து கூட்டணிக்கு வந்த ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்தார் என்று கூறி மும்பையைச் சேர்ந்த குணால் கம்ரா எனும் அரசியல் நையாண்டி கலைஞர் நிகழ்ச்சி நடத்திய ஓட்டலையும் ஸ்டுடி யோவையும் ஷிண்டே சிவசேனைக்காரர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது காவல்துறை. இன்னும் ஒருபடி மேலே போய் முதல்வர் பட்நவீஸ், குணால் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மிரட்டியிருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, அவரது அரசு சிறப்பு பொது பாதுகாப்பு மசோதா ஒன்றை சட்ட மன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் நோக்கம் அரசின் எந்தவொரு கொள்கை மற்றும் முடிவுகளுக்கு எதிரான கருத்து மற்றும் ஒழுங்க மைக்கப்பட்ட எதிர்ப்புகளை ஒடுக்குவது என்று கூறினாலும் -பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக கருத்துக் கூறுவதோ, போராடுவதோ கடும் குற்றம் எனக் கூறி 3 முதல் 7 ஆண்டு சிறை, ரூ.3 லட்சம் முதல் 5 லட்சம் அபராதம் என்று ஜனநாயகரீதி யான எதிர்ப்புகளை நசுக்கவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தியா ஜனநாயகத்தின் பிறப்பிடம் என்று பிரதமர் மோடி முதலியோர் வெளிநாடுகளில் போய் தம்பட்டம் அடித்தாலும் இது சகிப்பின்மை யின் இருப்பிடமாக மாறி வருகிறது என்பதே நிஜம். இந்த நவபாசிச நாசகர நடவடிக்கைகளை நாட்டு மக்கள் கட்டாயம் முறியடிப்பார்கள்.