இயற்கையின் எச்சரிக்கை!
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக் கின்றன. சமீபத்திய உதாரணம், உத்தரகண்டின் தாராலி கிராமத்தில் ஆகஸ்ட் 5, அன்று ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவு. இந்தச் சம்ப வம், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை பேரழிவுகளின் பயங்கரமான விளைவுகளை நமக்கு மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது. இந்த துயர சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். மேலும், 40-50 வீடுகள் மற்றும் 50 ஹோட்டல்கள் சேதமடைந்தன.
இந்தச் சம்பவம், ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப் பின் (இஸ்ரோ) தரவுகளின்படி, உத்தரகண்டில் 1988 முதல் 2023 வரை 12,319 நிலச்சரிவுகள் பதிவாகி யுள்ளன. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக நிலச் சரிவுகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித் துள்ளது. 2023-இல் மட்டும் 1,100-க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகள் ஏற்பட்டன. 2024-இல் பருவமழை காலத்தில் வெறும் 17 நாட்களில் 1,521 நிலச்சரிவு கள் பதிவாகியுள்ளன. இந்த அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்கள், உத்தரகண்ட் ஒரு நிலச்சரிவு அபாய மண்டலமாக மாறிவிட்டதை தெளிவாகக் காட்டு கின்றன.
உலக வானிலை அமைப்பின் 2024 அறிக்கை யின்படி, ஆசியக் கண்டம் உலக சராசரியை விட இரண்டு மடங்கு வேகமாக வெப்பமடைந்து வரு கிறது. இந்த வெப்பமயமாதல், இமயமலை பனிப் பாறைகள் உருகுவதற்கு காரணமாகிறது. 2024-இல், கண்காணிக்கப்பட்ட 24 பனிப்பாறைகளில் 23 பனிப்பாறைகள் குறிப்பிடத்தக்க அளவு உருகி யுள்ளன. இது நீர் ஓட்டத்தை அதிகரித்து, மலைப் பகுதிகளில் மண்ணின் ஸ்திரத்தன்மையை குறைத்து, நிலச்சரிவு அபாயத்தை அதிகரிக்கிறது. இதனால், பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளங்கள் (GLOFs) போன்ற அச்சுறுத்தல்களும் ஏற்படுகின்றன.
பருவநிலை மாற்றத்தால் பருவமழை முறை கள் மாறி, திடீர் மேகவெடிப்பு மற்றும் மிக அதிக கனமழை போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இமயமலைப் பகுதிக ளில் பருவமழை காலத்தில் நிலச்சரிவு அபாயம் 90 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. உத்தரகண்டின் நிலச்சரிவு நெருக்க டிக்கு, ஒரு சில உடனடி மற்றும் நீண்டகாலத் தீர்வுத் திட்டங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
அபாயகரமான பகுதிகளில் புதிய கட்டுமா னங்களுக்குத் தடை விதிப்பது மிக முக்கியம். வன அடர்த்தியை அதிகரித்து மலைச் சரிவுகளின் இயற்கை நிலைத்தன்மையை மேம்படுத்த வேண் டும். கார்பன் உமிழ்வு குறைப்பு மூலம் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது அவசியம். மலைப் பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களு க்கு (சூரிய மற்றும் காற்றாலை மின்சாரம்) முன்னு ரிமை அளிக்க வேண்டும்.பாரம்பரிய அறிவு மற்றும் நவீன தொழில்நுட்பத்தை இணைத்த இயற்கை சார்ந்த தீர்வுகளை ஊக்குவிக்க வேண்டும்.
இப்பூவுலகின் எதிர்காலம், பருவநிலை மாற்றத் தை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் மற்றும் இயற் கையோடு இணக்கமான வளர்ச்சி மாதிரியை ஏற்றுக் கொள்கிறோமா என்பதைப் பொறுத்தே அமையும்.